எங்கேயோ கேட்ட குரல் / சூப்பர் ரஜினி
ஒரு ஞாயிற்றுக்கிழமை வீட்டில் மும்முரமாக வேலை செய்துகொண்டிருந்தேன். கே டிவியில் ஏதோ ஒரு படம் ஓடிக்கொண்டிருந்தது. அதில் ரஜினி வித்தியாசமாக இருந்தார். என்னவோ அந்தப் படம் என்னை இழுத்தது. வேலைகளை ஓரங்கட்டிவிட்டு படத்தை பார்க்க ஆரம்பித்தேன். அந்தப் படம் எங்கேயோ கேட்ட குரல் என்பதையும் இயக்குனர் எஸ்.பி.முத்துராமன் இயக்கம் என்பதையும் என் வீட்டம்மாவிடம் கேட்டு தெரிந்துகொண்டேன்.
மிகவும் ஆச்சர்யமாக இருந்தது. எஸ்.பி.முத்துராமன் கமர்சியல் படங்களின் ராஜா என்று மட்டுமே நான் நினைத்திருந்தேன். இந்தப் படத்தில் வித்தியாசமான ரஜினி, யதார்த்தமான கதை என்று அவர் என்னை ரொம்பவே ஆச்சர்யப்படுத்தியதோடு பிரமிப்பாக பார்க்க வைத்துவிட்டார். கம்பீரமான கதை சொல்லல், சற்றும் நழுவிடாத திரைக்கதை, கதாபாத்திரத்தை களங்கப்படுத்தாத கதையோட்டம்... அப்பப்பா... இப்போ தோலான் துருத்தி எதை எதையோ படம்னு எடுக்கிறாங்க. ஆனா தொழில்நுட்பங்கள் ரொம்ப இல்லாத அந்தக் காலத்திலேயே எவ்வளவு சாதிச்சிருக்காங்க.
ரஜினி, அம்பிகா, ராதா, டெல்லி கணேஷ், கமலா காமேஷ், குட்டி மீனா என கதாபாத்திரங்களின் தேர்வும் அவர்களின் இயற்கையான நடிப்பும்... பார்த்து நான் மெய் மறந்தேன் என்பது தான் உண்மை.
Comments
Post a Comment