Murugan Manthiram Profile & Songs List


வள்ளியூரிலிருந்து வந்த பாட்டு மந்திரம்!




திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூருக்கு அருகில்உள்ள அம்மச்சிக்கோயில் என்கிற சிறிய கிராமம்தான் முருகன் மந்திரம் பிறந்த ஊர். அப்பா மந்திரம் இசக்கிமுத்து. லலிதா, ஜெயக்கொடி என முருகன் மந்திரத்துக்கு இரண்டு அம்மாக்கள் அமைந்தார்கள்.


பெரிய அம்மாவுக்குத் திருமணம் ஆகி 10 வருடங்களுக்கு மேலாகியும் குழந்தை இல்லாததால், தன் தங்கையை கணவருக்கு மணமுடித்து வைத்தார், அதன் பின் இருவருக்கும் குழந்தைகள் பிறந்து, ஒரே வீட்டில் இன்று வரை வாழ்க்கை தொடர்கிறது.


ஏழு குழந்தைகளில் நான்காவதாகப் பிறந்த இவருக்கு பள்ளிக்காலத்திலேயே சினிமா மீது ஆர்வம் வந்துவிட்டது. சினிமாவே வாழ்க்கை என்பதை 11வது வகுப்பு படிக்கும்போது முடிவு செய்துவிட்டார்.11வது வகுப்பில் , தமிழ் ஆசிரியர் லில்லி சரோஜா ‘தலைவன், தோழி, காதல், பசலை, இற்செறித்தல், களவு, கற்பு’ என சங்க இலக்கியப் பாடல்களைப்பற்றி மரத்தடி வகுப்புகளில் விளக்கியபோது இவருக்கு இலக்கிய ஈடுபாடு வந்தது.



பிழைப்பு தேடி மும்பைக்குப் போன முருகன், பின்னர் சென்னைக்கு வந்து, பாடலாசிரியர் விக்டர்தாஸ் உதவியாளராக சில காலம் பணியாற்றினார். பாடல்கள் எழுதுவது எப்படி என்பதற்கு அவரே குருவாக இருந்து வழிகாட்டினார். தமிழ் இலக்கணம் தெரிந்து மெட்டுக்கு பாட்டு எழுதும் சூட்சுமங்களை சொல்லித்தந்தார். முதல் பாடல் வாய்ப்பையும் அவரே வாங்கித் தந்தார். ‘பூக்கள் இருக்க, வெறும் போர்கள் எதற்கு’ என்று தொடங்கும் அந்தப்பாடல் பண்பலையில் வெளியிடவே எழுதப்பட்டது.


அப்பாடலுக்குத்தான் முதன்முதலாக முருகன் மந்திரத்துக்கு சன்மானம் கிடைத்தது. இரண்டாவது பாடல் ஒரு டெலிபிலிமில் இடம் பெற்றது. கனடாவில் வசிக்கும் இசையமைப்பாளர் கபிலேஷ்வர் அந்த வாய்ப்பைத் தந்தார். ‘வானவில் நான் வானவில்’ என்று தொடங்கும் அந்தப்பாடலை கார்த்திகா மகாதேவன் பாடினார்.


சினிமாவில் முதல் பாடல் வாய்ப்பு தந்து திரைப்பட பாடலாசிரியராக அறிமுகப்படுத்தியவர், ஏ.ஆர்.ரகுமானின் சகோதரி ரெஹானா. கௌரிசங்கர் இயக்கிய ‘பேசுவது கிளியா’ படத்தின் மூலமாக இவரது பயணம் தொடங்கியது ‘பூலோகம் எல்லாமே ஃப்ரெண்ட்ஷிப்….’ என்று தொடங்கும் அந்தப் பாடலை ரெஹானா பாடகர் கௌசிக்குடன் இணைந்து பாடி இருந்தார்.


எஸ்.எஸ்.குமரன் இசையமைத்த ‘விருந்தாளி’, ‘தேநீர் விடுதி’, ‘காதல் பாதை’ படங்களில் பாடல்கள் எழுதினார். ‘விருந்தாளி’யில் 4 பாடல்களை எழுதியிருந்தார். கிராமங்களில் உள்ள சிறப்புகள் நகரத்தில் இல்லை என்பதாக ஒரு ஒப்பீட்டுப் பாடலை இவர் எழுத வினைதா, சின்மயி, மதி பாடினார்கள். ‘கொக்கக்கோ கோழி, கொக்கக்கோ. கொண்ட சேவலை நீயும் கட்டிக்கோ’ என்று தொடங்கும் அந்த பாடலின் வரிகளைக் கேட்டு இயக்குநர் சேரன் மேடையிலேயே பாராட்டினார்.


‘விருந்தாளி’ படத்தில் எழுதிய ‘கடிதமே கடிதமே முகவரிகள் அறிவாயோ’ பாடலும் இவருக்கு முகவரி கொடுத்தது.‘தேநீர் விடுதி’ படத்தில் 3 பாடல்கள். ஆதித் மற்றும் ரேஷ்மி நடித்த அந்தப் படத்தின் பாடல்களும் நண்பர்களால் பாராட்டப்பட்டன. பாடலாசிரியராக இவரை நிறைய பேருக்கு கொண்டு போய்ச் சேர்த்தது, ‘உ’ படத்தில் எழுதிய ‘திக்கித் தெணறுது தேவதை’ பாடல். இப்படத்தின் அத்தனை பாடல்களையும் முருகன் மந்திரமே எழுதினார்.


‘சாரல்’ படத்தில் இஷான் தேவ் இசையில் எழுதக்கிடைத்த வாய்ப்பு அடுத்த படி. இந்தப் படத்தில் ஒரு கல்யாணப்பாடல், ஒரு காதல் காமம் குழைந்த பாடல், ஒரு பக்கா கமர்ஷியல் பாடல் என எல்லாமே சிறப்பாக அமைந்துள்ளன.


‘திருட்டு விசிடி’ படத்திற்குப் பின், காதல் சுகுமார் இயக்கத்தில், காந்த் தேவா இசையில் நான்கு பாடல்கள் எழுத கிடைத்த வாய்ப்பு இவரது அடுத்த மைல் கல். மாணிக்க விநாயகம், மகிழினி மாறன் பாடியுள்ள சீமந்தப் பாடல் ஒன்று இந்தப்படத்தில் இடம் பெற்றிருக்கிறது. தமிழ் சினிமாவில் சீமந்தப்பாடல்கள் இல்லாத குறையை அந்தப்பாடல் நிச்சயம் தீர்க்கும் என்று கேட்டவர்கள் அனைவரும் சொல்கிறார்கள். ‘மகராசிக்கு சீமந்தம்…’ என்று தொடங்குகிறது அந்தப்பாடல்.


நடிகை பாவனாவின் சகோதரர் ஜெயதேவ் இயக்கத்தில், இஷான் தேவ் இசையில் கலையரசன் நடிப்பில் உருவாகி வரும் ‘பட்டினப்பாக்கம்’ படத்தில் சென்னையைக் குறிப்பிடுகிற ஒரு பாடல் அமைந்திருக்கிறது. ‘சென்னை எங்க ஊரு எங்க ஊரு…’ என்று தொடங்குகிற அந்தப்பாடல் சென்னையோடு தொடர்புடைய அத்தனை பேருக்கும் பிடிக்கும் வகையில் அமைந்துள்ளது. ஐந்து இசையமைப்பாளர்கள் அந்தப் பாடலைப் பாட இருப்பது இன்னும் சிறப்பான ஒன்று.


தயாரிப்பாளர், இயக்குநர் சுரேஷ்காமாட்சி இயக்கும் ‘திருப்பதி லட்டு’ படத்தில் இடம் பெற்றிருக்கும் பாடல்களில் ‘பேயே பேயே காதல் பேயே’ என்று தொடங்கும் அதிரடிக் காதல் பாடல் ஒன்று இளசுகளைக் குறிவைத்து எழுதப்பட்டுள்ளது.


‘சாரல்’, ‘சும்மாவே ஆடுவோம்’, ‘பட்டினப்பாக்கம்’, ‘திருப்பதி லட்டு’, ‘காவு’, ‘எங்கேயும் நானிருப்பேன்’, ‘கேக்ரான் மேக்ரான் கம்பெனி’, ‘டன் டன்’, ‘நாகேஷ் திரையரங்கம்’, ‘வீட்டுக்கும் நாட்டுக்கும்’, ‘ஓவியா’, ‘மியா’ உள்ளிட்ட படங்களில் பாடல்கள் எழுதிவரும் முருகன் மந்திரம் சென்னைக்கு புறப்பட்டு வந்தது இயக்குநர் ஆகும் இலட்சியத்தோடு தான். விரைவில் அந்தக் கனவு நிஜமாகும் என்று நம்புகிறார்.


பத்திரிகையாளராக, பாடலாசிரியராக அடையாளப்பட்டுவிட்ட இவர், இணையதளம் வடிவமைத்துத் தரும் தொழிலிலும் தனித்துவம் பெற்றிருக்கிறார். இயக்குநர் கனவு நனவாகிவிட்டாலும், பாட்டுச்சாலைப் பயணம் தொடரும் என்கிறார் முருகன் மந்திரம்.


நன்றி: திரு.நெல்லை பாரதி, வண்ணத்திரை வார இதழ்.


Source Article Link: http://kungumam.co.in/VArticalinnerdetail.aspx?id=6709&id1=124&issue=20160711


முருகன் மந்திரம்


பாடல்கள்


பாகம் – 1
பூலோகம் எல்லாமே – பேசுவது கிளியா
கொக்க கொக்க கோழி – விருந்தாளி
கடிதமே கடிதமே – விருந்தாளி
எந்தன் உயிரே – விருந்தாளி
ஆச அரக்கி – விருந்தாளி
வெட்டவெளி – பயபுள்ள
உயிரோடு உறவாடி – தேநீர் விடுதி
என்னவோ என்னவோ – தேநீர் விடுதி
மெல்லென சிரிப்பாளோ – தேநீர் விடுதி
ஓம் மனசுல – காதல் பாதை
என்னவோ நெஞ்சிலே – காதல் பாதை
நீதான் நீதான் – காதல் பாதை
ஓம் மனசுல (சோகம்) – காதல் பாதை
திக்கித் தெணறுது தேவதை – உ – VU
ஆஹா இது சினிமா – உ – VU
சின்னக் குழந்தை – உ – VU
ஒருபடி மேல – உ – VU
காலின் கீழே வானம் – உ – VU
திக்கித் தெணறுது (Seniors) – உ – VU
காதலே வாராயோ – காதல் கிளுகிளுப்பு
வானவில் நான் வானவில் – காதல் கிளுகிளுப்பு
பொல்லாத கண்ணுக்குள்ள – திருட்டு வி.சி.டி
என் ஃபேஸ்புக் பக்கத்திலே – திருட்டு வி.சி.டி
விடியாத இரவிங்கு – சும்மாவே ஆடுவோம்
ரெட்ட ஜடைக்காரி – சும்மாவே ஆடுவோம்
மகராசிக்கு சீமந்தம் – சும்மாவே ஆடுவோம்
தலைவா தலைவா – சும்மாவே ஆடுவோம்
என்னம்மா இப்டி – சாரல்
ரோஜா பூப்போல – சாரல்
கண்ணாலத் தாக்குற – சாரல்
அன்பே எந்தன் – பட்டினப்பாக்கம்
சென்னை எங்க ஊரு – பட்டினப்பாக்கம்
யாரு யாரடி – யூகன்
காற்றோடு தீபம் – எங்கேயும் நானிருப்பேன்
விதியோ – எங்கேயும் நானிருப்பேன்
என்ன பெத்த ராசாவே – எங்கேயும் நானிருப்பேன்
சீறும் சிங்கமே – வதம்
சுண்டக்கா வெண்டக்கா – கேக்கிறான் மேய்க்கிறான்
என் சிறகில் வானம் – கேக்கிறான் மேய்க்கிறான்
மாமனுக்கு அத்தை – கேக்கிறான் மேய்க்கிறான்
மன்மத மன்மதா – வீரவம்சம்
பெண்ணே உன் அழகே – மியா


ALBUM
கண்களோடு கண்கள் – விலகுது திரை (Album)
ஆசை ஆசையாய் – விலகுது திரை (Album)
ரெக்கை ஆயிரம் – விலகுது திரை (Album)
இதயம் தந்தேன் – விலகுது திரை (Album)
விலகுது திரை – விலகுது திரை (Album)


DEVOTIONAL
இயேசு அழைக்கிறார் – பேரழகே(Christian Album)
ஆசையொரு ஆசை – பேரழகே(Christian Album)
அன்பு உள்ளம் – பேரழகே(Christian Album)
இதயம் ஒரு பூவாய் – பேரழகே(Christian Album)
நீ மகிழ்ந்து பாடு – பேரழகே(Christian Album)


ADVERTISEMENTS
புன்னகை இந்த புன்னகை – ஸ்ரீகுமரன் தங்கமாளிகை


ADVERTISEMENTS


இனி வர இருக்கும் பாடல்கள்
வாடி வாடி – நாகேஷ் திரையரங்கம்
பேயே பேயே – திருப்பதி லட்டு
வா மச்சான் – மியா
தாய் வீட்டை – கத்திரிக்கா வெண்டக்கா
பர பர பர ஊரு – கத்திரிக்கா வெண்டக்கா
இவள் வீடு – காவு
தந்தைப்பாட்டு – ஓவியா


இன்னும் சில படங்கள், சில குறும்படங்கள், சில தனி ஆல்பங்களின் பாடல்களும் வெளியாக காத்திருக்கின்றன.


அன்பின் வணக்கம்,


பாடல் எழுதுவது என்பதும், மெட்டுகளை உணர்ந்து புரிந்து அதற்கு வார்த்தைகள் தேடுவதும் மிக அழகான, ரசனையான நுட்பமான விஷயமாக நான் உணர்கிறேன். அப்படி வார்த்தைகள் தேடும் பயணம் ஒவ்வொன்றும், என்னை உயிர்ப்பித்துக் கொள்ளும் பயணம் என்றே சொல்வேன். எத்தனை உணர்வுகள், எத்தனையோ வார்த்தைகள்… நினைத்த வார்த்தை கிடைத்துவிட்டால் அடைகிற மகிழ்ச்சி…. எல்லையற்றது.


நண்பர்கள், நண்பர்களின் நண்பர்கள் படங்களுக்கு பாடல்கள் எழுதிய வகையில் இதுவரை எழுதி வெளியான பாடல்களின் எண்ணிக்கை 50 பாடல்களை கடந்திருக்கிறது. சினிமா பாடல்கள், ஆல்பங்கள், விளம்பர பாடல்கள், குறும்பட பாடல்கள், பக்திப்பாடல்கள் என பல வகையான பாடல்கள். எழுதியாயிற்று. வெளியான பாடல்களுக்கு இணையாக எழுதி வெளியாகாத பாடல்களின் எண்ணிக்கையும் இருக்கும். இருப்பினும் வெளியான பாடல்கள் மட்டும் 50 பாடல்களை கடந்திருப்பதை, உங்களுடன் பகிர்வதில் மகிழ்கிறேன்.


எனக்கு வாய்ப்பளித்த, இயக்குநர்கள், இசையமைப்பாளர்கள், தயாரிப்பாளர்கள், வாய்ப்புக்கு காரணமான நல்லுள்ளங்கள் என் பாடல்களின் அங்கமாக இருக்கும் பாடகிகள், பாடகர்கள், இசைக்கலைஞர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள், நடிகர், நடிகையர் அனைவருக்கும் என் பேரன்பும் நன்றிகளும். அழகான ஆயிரம் பாடல்களாவது எழுத வேண்டும்.மகிழ்ச்சி.!


என்றும் நட்புடன்,// முருகன் மந்திரம்


பாடல் : 1


பூலோகம் எல்லாமே ஃப்ரெண்ட்ஷிப்


படம்: பேசுவது கிளியா | இசை: ஏ.ஆர்.ரைஹானா


பாடியவர்கள்: ஏ.ஆர்.ரைஹானா, கௌசிக்


இணைய இணைப்பு:


https://www.youtube.com/watch?v=bHYG1b3pugA


சாதிகள் பேதங்கள் பார்ப்பதில்லை


அது கருப்பா சிவப்பா கேட்பதில்லை


எட்டு தொட்டு வரும் எண்பதையும் தொடும்


நட்புக்கிங்கே நரைகள் இல்லை


பாடல் : 2


கடிதமே கடிதமே முகவரிகள் அறிவோயோ


படம்: விருந்தாளி | இசை: எஸ்.எஸ்.குமரன்


பாடியவர்கள்: எஸ்.எஸ்.குமரன்


இணைய இணைப்பு:


https://www.youtube.com/watch?v=OspIofTn8dE


கடிதமே கடிதமே முகவரிகள் அறிவாயோ


உன் முகவரி இல்லையேல் எங்கு நீ செல்வாயோ


வாழ்க்கையே ஓர் கடிதம், வாசிக்க யார் வருவார்


ஆண்டவன் அனுப்பிடும் கடிதங்கள் புரிந்திடுமோ


பாடல் : 3


கொக்க கொக்க கோழி கொக்கக்கோ


படம் விருந்தாளி | இசை: எஸ்.எஸ்.குமரன்


பாடியவர்கள்: சின்மயி, வினைதா, ஸ்ரீமதி


இணைய இணைப்பு:


https://www.youtube.com/watch?v=gNZNESuRcGE


கல்யாணிப்பாட்டியப்போல கைராசி டாக்டரு யாரு


மெட்ராசுப் பட்டணம் போல இங்க


ஜனக்கூட்டம் இல்ல பொகை மூட்டம் இல்ல


இந்தக் காத்துல கறை படல






பாடல் : 4


எந்தன் உயிரே


படம்: விருந்தாளி | இசை: எஸ்.எஸ்.குமரன்


பாடியவர்கள்: யஷ் கோல்ச்சா


இணைய இணைப்பு:


https://www.youtube.com/watch?v=P-dPS-yTafU


புது மழையெனப் பெய்தாய்


இமை இரண்டையும் நெய்தாய்


உயிர்ப்பூவினை கொய்தாய் நீ


இன்னும் என்ன செய்வாய்


பாடல் : 5


ஆச அரக்கி ஆள நொறுக்கி


படம்: விருந்தாளி | இசை: எஸ்.எஸ்.குமரன்


பாடியவர்கள்: யஷ் கோல்ச்சா, பி.சுவாசினி


இணைய இணைப்பு:


https://www.youtube.com/watch?v=deClHD3Y6wg


ஆச அரக்கி ஆள நொறுக்கி, நெஞ்சக் கிழிச்ச


ஏண்டி கிறுக்கி எதுக்கு சிரிச்சி, என்னைக்கவுத்த


ஓரஞ்சாரம் நின்னு உருக வச்ச


நேரம் காலம் எல்லாம் கொழம்ப வச்ச


பாடல் : 6


வெட்டவெளி பொட்டல்காட்டுக்கு


படம்: பயபுள்ள | இசை: கபிலேஷ்வர்


பாடியவர்கள்: புஷ்பவனம் குப்புசாமி, வினைதா


இணைய இணைப்பு:


https://youtu.be/-dfofEve65M?t=980


கத்தரிப்பூ சேல கட்டி கண்ணில் நிக்கிற


மந்திரிச்ச கோழி போல என்னைப் பாக்கிற


ஒத்தையடி பாதையில ஒளிஞ்சி நிக்கிற


ஒதட்டு மே ஒதட்ட வச்சி முத்தம கேக்கிற


பாடல் : 7


உயிரோடு உறவாடி


படம்: விருந்தாளி | இசை: எஸ்.எஸ்.குமரன்


பாடியவர்கள்: எஸ்.எஸ்.குமரன்


இணைய இணைப்பு:


https://www.youtube.com/watch?v=4WVHBPwbbJc


உயிரோடு உறவாடி


உலகம் மறந்து போவோம்


உனதோடு எனதாகி


கருவில் தொலைந்து தொலைந்து போவோம்


பாடல் : 8


என்னவோ என்னவோ பண்ணுது புள்ள


படம்: விருந்தாளி | இசை: எஸ்.எஸ்.குமரன்


பாடியவர்கள்:


எஸ்.எஸ்.குமரன், சின்மயி, எஸ்.மாளவிகா


இணைய இணைப்பு:


https://www.youtube.com/watch?v=vMRgAwN7txc


என்னவோ என்னவோ பண்ணுது புள்ள


எனக்கே ஏன்னு தெரியவில்ல


வெள்ளையா இருந்த மனசுக்குள்ள


கலரா கனவு வருது உள்ள


இது மொத்த சுத்தமா வௌங்கவில்ல, ஏன்டா?


பாடல் : 9


மெல்லென சிரிப்பாளோ


படம்: விருந்தாளி | இசை: எஸ்.எஸ்.குமரன்


பாடியவர்கள்: கௌசிக், மிருதுளா


இணைய இணைப்பு:


https://www.youtube.com/watch?v=rw9eH22EPVc


மெல்லென சிரிப்பாளோ ஜில்லென முறைப்பாயோ


என் கண்ணை இமை தின்றதே


கண்ணுக்குள் விழுந்தாளோ கல்லுக்குள் முளைத்தாளோ


என் நெஞ்சம் என்னை வென்றதே






பாடல் : 10


ஓம் மனசுல…


படம்: காதல் பாதை | இசை: எஸ்.எஸ்.குமரன்


பாடியவர்கள்: கௌசிக்


இணைய இணைப்பு:


https://www.youtube.com/watch?v=2PqAVN5iMZw


இருவிழியில் கலகம் நூறு


இமைகளிலே அவளின் பேரு


தேவதையின் உறவு உறவு


எனக்கு அது இரவல் சிறகு


பாடல் : 11


என்னவோ நெஞ்சிலே…


படம்: காதல் பாதை | இசை: எஸ்.எஸ்.குமரன்


பாடியவர்கள்: மகதி


இணைய இணைப்பு:


https://www.youtube.com/watch?v=SkulMteuPNw


கொன்று புதைக்கிறாய். உயிர் கொடுக்கிறாய்.


அந்த சேட்டைகள் ரசித்தேன்.


அடர்காற்றிலே அலைக்கழிகிற


ஒற்றைக் கேசமாய் தவித்தேன்.


பாடல் : 12


நீதான் நீதான் என்னுயிரே…


படம்: காதல் பாதை | இசை: எஸ்.எஸ்.குமரன்


பாடியவர்கள்: கௌசிக்


இணைய இணைப்பு:


https://www.youtube.com/watch?v=UH9ef40yefg


என் நெஞ்சில் ஒரு மின்னலாய் வந்து


என்னை ஏன் சிறை பிடித்தாய்?


காதலைத் தந்து காயங்கள் தந்து


கண்மணீ கதவடைத்தாய்…


பாடல் : 13


ஓம் மனசுல… (சோகம்)


படம்: காதல் பாதை | இசை: எஸ்.எஸ்.குமரன்


பாடியவர்கள்: கௌசிக், சத்யா நம்பி ராஜன்


இணைய இணைப்பு:


https://www.youtube.com/watch?v=SkulMteuPNw


வராதே எந்தன் உள்ளே வராதடி


தராதே உந்தன் அன்பை தராதடி


எனது வழி கல்லும் முள்ளும்


சேர்ந்ததடி


பாடல் : 14 திக்கித் தெணறுது தேவதை


படம் : உ (VU) | இசை: அபிஜித் ராமசாமி


பாடியவர்கள்: ஆஜீத், ஸ்ருதி நாராயண்


இணைய இணைப்புகள்:


https://www.youtube.com/watch?v=yfCK2Rg5o4I


மேக்கிங்:


https://www.youtube.com/watch?v=G5JwG04UntQ


திக்கித் தெணறுது தேவதை


வெட்கப் படுதொரு பூமழை


தானா, சிக்கிக் கெடக்கிறேன்


ஆம்பளை நான் தான்






பாடல் : 15


ஆஹா இது சினிமா….


படம்: உ (VU) | இசை: அபிஜித் ராமசாமி


பாடியவர்கள்: முகேஷ்


இணைய இணைப்பு:


https://www.youtube.com/watch?v=0lhFByIVQWU


தம்மும் டீயும் போதுமுன்னு


சந்தோஷமா இருப்போம்


ரெண்டு காலு மட்டும் போதுமுன்னு


வாய்ப்பு தேடி நடப்போம்


பாடல் : 16


சின்னக் குழந்தை….


படம்: உ (VU) | இசை: அபிஜித் ராமசாமி


பாடியவர்கள்: வேல்முருகன்


இணைய இணைப்பு:


https://youtu.be/k48Oxn0mDe0?t=985


லேசா பார்த்த பொண்ணோட பார்வை


அதுதான் காதலில் “உ“


திருமண நாளில் முடிவில் தொடங்கும்


இரவுப்பொழுதும் “உ“


பாடல் : 17 | ஒருபடி மேல….


படம்: உ (VU) | இசை: அபிஜித் ராமசாமி


பாடியவர்கள்:


தம்பி ராமையா, ஆஷிக், அருண்சுரதா ரங்கராஜன், CG கிருஷ்ணன்


இணைய இணைப்பு:


https://www.youtube.com/watch?v=0lhFByIVQWU


எறும்பா இருந்தா ஏணி எதுக்கு


உன்னை நீ ரசிச்சா தோல்வி ஒதுக்கு


விடாம மோது விடாதே


விடாதே!


பாடல் : 18


காலின் கீழே வானம்…


படம்: உ (VU) | இசை: அபிஜித் ராமசாமி


பாடியவர்கள்: CG கிருஷ்ணன்


இணைய இணைப்பு:


https://www.youtube.com/watch?v=CieAPQpN9kk


காலின் கீழே வானம்


காதல்கொண்டு நானும் மேகமாக


நூறுகோடி பூவாய், நெஞ்சின் உள்ளே


பூத்தாள் தேவ தேவதை.


பாடல் : 19


திக்கித் தெணறுது தேவதை (Seniors)


படம் : உ (VU) | இசை: அபிஜித் ராமசாமி


பாடியவர்கள்: ஆதித்யா, வந்தனா சீனிவாசன்


இணைய இணைப்புகள்:


https://www.youtube.com/watch?v=yfCK2Rg5o4I


மொட்டுச் சிரிப்புல உறைஞ்சு கெடக்கிறேன்


கிட்ட நடக்கையில் கெறங்கித் தவிக்கிறேன்


ஆத்தாடி,


உசுரெல்லாம் ஒழுகித் துடிக்கிறேன்.


பாடல் : 20


காதலே வாராயோ…


படம்: காதல் கிளுகிளுப்பு | இசை: கபிலேஷ்வர்


பாடியவர்கள்: பிரசன்னா


இணைய இணைப்புகள்:


https://www.youtube.com/watch?v=yfCK2Rg5o4I


யாரோடு யாரை இணைக்கின்றதோ


நிகழ்காலமே


வேரோடு விழுதை சருகாக்குமோ


எதிர்காலமே






பாடல் : 21


வானவில் நான் வானவில்…


படம்: காதல் கிளுகிளுப்பு | இசை: கபிலேஷ்வர்


பாடியவர்கள்: கார்த்திகா மகாதேவ், சுப்ரியா ஜோஷி


இணைய இணைப்புகள்:


https://www.youtube.com/watch?v=ARrvEk3HRAg


வாரம் ஓர் நாளிலே


உன் வருகை பூப் பூக்குமே


நாளும் உன் ஞாபகம்


என் நினைவில் நீர் ஊற்றுமே






பாடல் : 22


பொல்லாத கண்ணுக்குள்ள…


படம்: திருட்டு வி.சி.டி | இசை: ஜித்தின் ரோஷன்


பாடியவர்கள்: வேல்முருகன், நித்ய ஸ்ரீ சுப்ரமணியம்


இணைய இணைப்பு:


https://www.youtube.com/watch?v=kO2b0rDLosA


வெள்ள வேட்டி மனுசந்தான் கருப்புப்பணம் சேர்க்குறான்


கட்டடமா கட்டிக்கட்டி கல்வி விக்குறான்


கோட்டைக்குள்ள போகத்தான் குனிஞ்சு குனிஞ்சு நிக்கிறான்


கட்டுக்கட்டா ஊழல் பண்ணி சொத்து சேக்குறான்






பாடல் : 23


என் ஃபேஸ்புக் ஃபேஸ்புக் பக்கத்திலே…


படம்: திருட்டு வி.சி.டி | இசை: ஜித்தின் ரோஷன்


பாடியவர்கள்: சுசித்ரா


இணைய இணைப்பு:


https://www.youtube.com/watch?v=kO2b0rDLosA


என் Facebook Facebook பக்கத்திலே / தினம்


நட்பின் அழைப்புகள் குவியுதுங்க


நான் LOGIN பண்ணும் நேரத்திலே


அந்த TWITTER SERVER தெணறுதுங்க






பாடல் : 24


விடியாத இரவிங்கு…


படம்: சும்மாவே ஆடுவோம் | இசை: ஸ்ரீகாந்த் தேவா


பாடியவர்கள்: அனந்து


இணைய இணைப்பு:


https://youtu.be/a79fvhquE3g?t=945


திரைகள் இல்லாமல் படங்கள் காட்டிய


கம்பன் இளங்கோவும் என் பாட்டன்.


ஒலிகள் இல்லாமல் பாட்டுக்கட்டிய


வள்ளுவன் கூட எம் பாட்டன்






பாடல் : 25


ரெட்ட ஜடைக்காரி…


படம்: சும்மாவே ஆடுவோம் | இசை: ஸ்ரீகாந்த் தேவா


பாடியவர்கள்: மகாலிங்கம், ரம்யா


இணைய இணைப்பு:


https://youtu.be/a79fvhquE3g?t=945


புள்ள பெக்க வாடி


பூசை வைக்க வாரேன்


வெள்ளி செவ்வாய்


ஒனக்கு பொங்க வச்சி தாரேன்






பாடல் : 26


மகராசிக்கு சீமந்தம்…


படம்: சும்மாவே ஆடுவோம் | இசை: ஸ்ரீகாந்த் தேவா


பாடியவர்கள்: மாணிக்க விநாயகம், மகிழினி மணிமாறன்


இணைய இணைப்பு:


https://www.youtube.com/watch?v=xEPRZ9Ccn2o


அம்மன் சாமி செலையழகு


எங்க அம்மா போல யாரழகு


பிள்ளை சுமக்கும் தாயழகு


பெண்மைக்கு அதுதான் பேரழகு


பாடல் : 27 தலைவா தலைவா…


படம்: சும்மாவே ஆடுவோம் | இசை: ஸ்ரீகாந்த் தேவா


பாடியவர்கள்: வேல்முருகன், ஜெகதீஷ்


இணைய இணைப்பு:


https://www.youtube.com/watch?v=I3mizdCEnrs


https://www.youtube.com/watch?v=JOerFQ1oZDU


என்னைப்போல ரசிகன் எத்தனையோ கோடி


அன்பால தான் உன்னை தினம் தேடி


எத்தனையோ நடிகன் நித்தம் நித்தம் வருவான்


என் தலைவன் இடத்தை யாரு இங்க புடிப்பான்






பாடல் : 28


என்னம்மா இப்டி பண்றீங்களே மா…


படம்: சாரல் | இசை: இஷான் தேவ்


பாடியவர்கள்: அந்தோணி தாசன், இஷான் தேவ்


இணைய இணைப்பு:


https://youtu.be/wQYeRnxmcog?list=PLjity7Lwv-zrAw5arzgo2BOKapTPm_o5J


ஏராள மேக்அப் எல்லாம் மூஞ்சியில பூசிக்கிட்டு


பூராவும் மூடிக்கிட்டு வரீங்க


பலான மேட்டர் எல்லாம் இன்டர்நெட்டில் பாத்துப்புட்டு


LKG புள்ள போல நடிப்பா






பாடல் : 29 ரோஜா பூப்போல…


படம்: சாரல் | இசை: இஷான் தேவ்


பாடியவர்கள்:


நிகில் மேத்யூ, சோனியா, ராஜேஷ் ராஜ்,

இஷான் தேவ், ரேஷ்மா ராகவேந்திரா


இணைய இணைப்பு:


https://youtu.be/wQYeRnxmcog?list=PLjity7Lwv-zrAw5arzgo2BOKapTPm_o5J&t=830


அடி ஆச மரிக்கொழுந்தே அத்த பெத்த மல்லிகையே


மாமன் மனசுக்குள்ள கப்பல் விடுங்க


அட மீச முறுக்கிக்கிட்டு முந்தானைய கட்டிக்கிட்டு


முழுசா விடிஞ்ச பின்னும் காலில் கெடங்க






பாடல் : 30


கண்ணாலத் தாக்குற …


படம்: சாரல் இசை: இஷான் தேவ்


பாடியவர்கள்: சாதனா சர்கம், இஷான் தேவ்


இணைய இணைப்பு: https://www.youtube.com/watch?v=r9MkQ4ZS6ns


கண்ணாலத் தாக்குற களவாடப் பாக்குற


தோள்மேல ஊஞ்சல் கட்டி நீயாட்டுற


நீயாட்டுற நெஞ்சத் தாலாட்டுற


தாக்காட்டுற தங்கப் பூ காட்டுற






பாடல் : 31 அன்பே எந்தன் …


படம்: பட்டினப்பாக்கம் | இசை: இஷான் தேவ்


பாடியவர்கள்: அதீப், அகிலா ஆனந்த், இஷான் தேவ்


இணைய இணைப்பு: https://youtu.be/GC6KiQp-gzg?t=252


ஒரு தீக்குச்சி உரசலில்


சில பூக்களும் பூக்குதே


மெல்ல நீ தொட்டுப் போகையில்


பூகம்பம் தோற்குதே






பாடல் : 32


சென்னை எங்க ஊரு எங்க ஊரு..,


படம்: பட்டினப்பாக்கம்


இசை: இஷான் தேவ் | பாடியவர்கள்: இஷான் தேவ்


இணைய இணைப்பு: https://www.youtube.com/watch?v=GC6KiQp-gzg


கொள்ள மழைதான் கொட்டி மெரட்ட


வெள்ளக் கடலில் ஊரு மெதக்க


எதுத்து நின்னோம் எழுந்து நின்னோம்


நாங்க சென்னைத் தமிழன்






பாடல் : 33


யாரு யாரடி, நீ யாரு யாரடி…


படம்: யூகன் | இசை: ரஷாந்த் அர்வின்


பாடியவர்கள்: CG கிருஷ்ணன்


இணைய இணைப்பு: https://www.youtube.com/watch?v=1E7hhvAeY6M


ஒரு ஆசை தருகிறாய் எனை மீறிச் செல்கிறாய்


உயிர் நோகச் செய்கிறாய் நீயே


பொய்க் கோபம் ரசிக்கிறேன். கை சேரத் துடிக்கிறேன்


மெய் பேச மறுக்கிறாய் நீயே






பாடல் : 34 காற்றோடு தீபம் ஆடுதே


படம்: எங்கேயும் நான் இருப்பேன்


இசை: ES. ராம் | பாடியவர்கள்: விஜய் யேசுதாஸ்


இணைய இணைப்பு: https://youtu.be/wgkv1sFoCug?t=833


ஆசை அலையாக மாறாதோ


காதல் கரை தேடி ஓடாதோ


பாச வலை தாண்டி வாராதோ


பாவம் சிறுமீனும் வாழாதோ






பாடல் : 35 விதியோ சதியோ


படம்: எங்கேயும் நான் இருப்பேன்


இசை: ES. ராம் | பாடியவர்கள்: விஜய் யேசுதாஸ்


இணைய இணைப்பு: https://youtu.be/wgkv1sFoCug?t=833


பூக்கள் இல்லை என்றால் வாசம் இல்லையா


புத்தன் இல்லை என்றால் ஆசை இல்லையா


காசு இல்லை என்றால்


வாழ்க்கை இங்கு இல்லையா






பாடல் : 36 என்னப் பெத்த ராசாவே…


படம்: எங்கேயும் நான் இருப்பேன்


இசை: ES. ராம் | பாடியவர்கள்: மாணிக்க விநாயகம்


இணைய இணைப்பு: https://youtu.be/wgkv1sFoCug?t=833


செவ்வரளி பூ வாசம் செத்துப்போச்சே உன் நேசம்


அத்துப்போன என் பாசம் பாவியே


பொட்டு வைக்க நாள் பாத்து


பொட்டபுள்ள உயிர்க்காத்து


விட்டுப்போன நீ ஏனோ ஏன் சாமியே






பாடல் : 37 சீறும் சிங்கமே …


படம்: வதம்


இசை: ரவி விஜயானந்த்






பாடியவர்கள் :


எம்.எல்.ஆர்.கார்த்திகேயன்


ரவி விஜயானந்த்


நீ… நிமிர்ந்து நில்லு துணிந்து சொல்லு


இனத்தின் பெருமைகள் வெல்லும்டா வா


பெருந்தலைவர் வழியிலே


நமது பேரையே…


உலகம் என்றும் தான் சொல்லும்டா






பாடல் : 38


சுண்டக்கா வெண்டக்கா …


படம்: கேக்கிறான் மேய்க்கிறான்


இசை: ஆதித்யா மகாதேவன் | பாடியவர்கள்: மகாலிங்கம்


இணைய இணைப்பு:


https://www.youtube.com/watch?v=0Wt39oaqgH4


கண்ணால கட்டிக்க கதை பேச ஒத்துக்க


முட்டிக்க மோதிக்க சம்மதிடி


நெஞ்சோட ஒட்டிக்க அஞ்சாறு பெத்துக்க


அய்யோ நீ வந்தாக்க நிம்மதிடி






பாடல் : 39


என் சிறகில் வானம்…


படம்: கேக்கிறான் மேய்க்கிறான்


இசை: ஆதித்யா மகாதேவன் | பாடியவர்: சுஜித் சுரேசன்


இணைய இணைப்பு:


https://www.youtube.com/watch?v=kqcx1w5taCI


இமைகள் திறந்து தேடும்போது


இமைகள் துடித்து ஓயுதே


காதலின் வலிகள் காயும் செய்யும்


கண்ணுக்குள் கடலாய் ஈரம் பாயும்


கரைகிறேன் வா நீ… காதலின் ராணீ….






பாடல் : 40 மாமனுக்கு அத்தை மரம்…


படம்: கேக்கிறான் மேய்க்கிறான்


இசை: ஆதித்யா மகாதேவன்


பாடியவர்கள்:


ஆதித்யா மகாதேவன், ஜோதிர்மயி


இணைய இணைப்பு: https://www.youtube.com/watch?v=jZZ8vqDJEOc


பூவுக்கு பூட்டுகளும் கிடையாதே


சாவிகள் கொண்டு நீயும் அலையாதே


அவிழ்க்கவா பூவின் கதவுகள்


அணைக்கவா தொடங்கும் உறவுகள்


பாடல் : 42


என் சிறகில் வானம்…


படம்: கேக்கிறான் மேய்க்கிறான்


இசை: ஆதித்யா மகாதேவன் | பாடியவர்: சுஜித் சுரேசன்


இணைய இணைப்பு:


https://www.youtube.com/watch?v=kqcx1w5taCI


இமைகள் திறந்து தேடும்போது


இமைகள் துடித்து ஓயுதே


காதலின் வலிகள் காயும் செய்யும்


கண்ணுக்குள் கடலாய் ஈரம் பாயும்


கரைகிறேன் வா நீ… காதலின் ராணீ….


விலகுது திரை – ALBUM


இசை: கார்த்திகா மகாதேவ்


பாடியவர்கள்:


கார்த்திகா மகாதேவ், பிரசன்னா,


ஹரிச்சரண், ராகுல் நம்பியார்


இணைய இணைப்பு:


https://itunes.apple.com/us/album/vilagudhu-thirai-ep/id1192656005


http://www.saavn.com/s/album/english/Vilagudhu-Thirai-2016/YuEJXgJkWl0_
இதயம் தந்தேன் 43. விலகுது திரை
ஆசை ஆசையாய்
கண்களோடு கண்கள் பேச
ரெக்கை ஆயிரம்






பாடல் : 47


இயேசு அழைக்கிறார்…


பேரழகே – கிறிஸ்தவ பாடல்கள் ஆல்பம்


இசை: ஜெஸ்விக் சார்லி | பாடியவர்கள் : யாஸின்


இணைய இணைப்பு:


https://www.youtube.com/watch?v=X5mfCg9k_ZI&feature=youtu.be


தேவ அருள்மழை தேவை நாளுமே


தேவன் ஏசுவைப் பாடு


வேத வசனங்கள் விரும்பி வாசித்தால்


நன்மை பெருகுமே பாடு


பாடல் : 48


ஆசையொரு ஆசை…


பேரழகே – கிறிஸ்தவ பாடல்கள் ஆல்பம்


இசை: ஜெஸ்விக் சார்லி | பாடியவர்கள் : யாஸின்


இணைய இணைப்பு:


https://www.youtube.com/watch?v=g6KoGG89vgw&feature=youtu.be


அன்னை மரி அன்பின் மடி


குழந்தை ஏசு சிரிக்கிறார்


பூமியிலே தேவ ஒளி


புதுமைகளால் நிறைக்கிறார்


பாடல் : 49 அன்பு உள்ளம் காணிக்கை…


பேரழகே – கிறிஸ்தவ பாடல்கள் ஆல்பம்


இசை: ஜெஸ்விக் சார்லி | பாடியவர்கள் : ஹேமா ஜான்


இணைய இணைப்பு:


https://www.youtube.com/watch?v=H1xbpVVtp-w


அன்பு உள்ளம் காணிக்கை


ஆயுள் மொத்தம் காணிக்கை


உதவி செய்தல் காணிக்கை


உயர்ந்த எண்ணம் எண்ணிக்கை


இறைவனின் அன்பை நீ ருசிப்பதே காணிக்கை


இருப்பதை கொடுத்து நீ துதிப்பதே காணிக்கை


சுத்த இதயமே புனித காணிக்கை


பாடல் : 50 இதயம் ஒரு பூவாய் பூக்கிறதே …பேரழகே – கிறிஸ்தவ பாடல்கள் ஆல்பம்


இசை: ஜெஸ்விக் சார்லி | பாடியவர்கள் : ஹேமா அம்பிகா


இணைய இணைப்பு:


https://www.youtube.com/watch?v=7J2cWiZiDtE


இதயம் ஒரு பூவாய் பூக்கிறதே


இறைவா தினம் நன்றி சொல்லி விடவே


தினம் தோறும் வேர்களில் நீரை ஊற்றிடும்


தோட்டக்காரரே


திரை மாறும் வாழ்க்கையில் பாதை காட்டிடும்


தோழா தூயவரே


பாடல் : 51


நீ மகிழ்ந்து பாடு …


பேரழகே – கிறிஸ்தவ பாடல்கள் ஆல்பம்


இசை: ஜெஸ்விக் சார்லி | பாடியவர்கள் : வேலு


இணைய இணைப்பு:


https://www.youtube.com/watch?v=7J2cWiZiDtE


தேவ மைந்தனும் அவர் தான்


ஊற்றுத் தண்ணீரும் அவரே தான்


நல்ல மேய்ப்பனும் அவர் தான்


நம்மை மீட்பதும் அவரே தான்






பாடல் : 52


அன்பில் செய்த புன்னகை …


சென்னை சில்க்ஸ் – ஸ்ரீகுமரன் தங்கமாளிகை


இசை: இஷான் தேவ் | பாடியவர்கள் : இஷான் தேவ்


இணைய இணைப்பு:


https://www.youtube.com/watch?v=79uKfDnfj-s


புன்னகை இந்த புன்னகை


அன்பில் செய்த புன்னகை


தேவதை நீ தேவதை


எங்கள் வீட்டு தேவதை


இது என்றும் தொடரும் பந்தமே


மீண்டும்…


விரைவில் இந்த பாடல்களின் முழு வரிகளோடு, முருகன் மந்திரம் பாடல்கள் – பாகம் 1, புத்தகமாக வெளியிடும் முயற்சியிலும் இருக்கிறேன்.


பாடல் எழுதுவதற்கான எனது முயற்சியிலும் பயிற்சியிலும் அன்போடு என் கைப்பிடித்து கவி நடத்திய பாசமிகு அண்ணன் என் ஆசான்… கவிஞர். விக்டர்தாஸ் அவர்களுக்கும், என் தமிழ் ஆசிரியப்பெருமக்கள் அனைவருக்கும்… திரைப்படத்தில் என்னை பாடலாசிரியனாக அறிமுகம் செய்த ஏ.ஆர்.ரைஹானா அக்கா அவர்களுக்கும், அதற்கு காரணமான நண்பர் இசையமைப்பாளர் கபிலேஷ்வர் அவர்களுக்கும்…


எங்கள் வள்ளியூரில் என்னை வார்த்தெடுப்பதில் பங்காற்றிய வள்ளியூர் தென்றல் குழுவினர், பாசமிகு அண்ணன்கள், எஸ். ஜெபக்குமார், கவின்வேந்தன், ஜெய.வெங்கடேஷ் ஆகியோருக்கும், பாசமிகு அண்ணன் பனிபாஸ்கருக்கும், நண்பர்களாக என்னோடு பயணித்த ஆறுமுகம் மாமா, லிங்கம், என் அன்பு தம்பிகள் ஜெபமணி, கோ. முத்துக்குமார், ராஜேஷ் மகாமின், குணசீலன் ஆகியோருக்கும், என் அன்பான தோழிகளுக்கும்… முக்கியமாக எனது அன்னைகள், தந்தை, சகோதர, சகோதரிகள் உள்ளிட்ட எங்கள் குடும்ப உறவுகள் அத்தனை பேருக்கும், என் மனைவி கிருஷ்ணமணி, குழந்தைகள் மதிவாசசி, மகிழ் சித்திரனுக்கும்…


மிகுந்த அன்போடும் அரவணைப்போடும் ஆதரவோடும் என்னை வளர்த்துக்கொண்டிருக்கும் அனைத்து ஊடக நண்பர்களுக்கும், ஊடகங்களுக்கும், மக்கள் தொடர்பாளர்களுக்கும் முகங்கள் தெரியாவிடினும் முகநூலிலும் அனைத்து சமூக ஊடகங்களிலும் உற்சாகம் தரும் அனைத்து நண்பர்களுக்கும்…


பெயர் குறிப்பிட மறந்த/முடியாத அத்தனை பேருக்கும் என் உள்ளார்ந்த நன்றியும் அன்பும்.

MURUGAN MANTHIRAM



muruganmanthiram@gmail.com


muruganmanthiram@live.com


https://www.facebook.com/murugan.manthiram


https://twitter.com/muruganmantiram

Comments

Popular posts from this blog

சாதி முரண், என்பது சாதாரணமானதல்ல, அது ஒரு உளவியல் போர்.