Posts

Showing posts with the label முருகன் மந்திரம் விமர்சனங்கள்

Alia Bhatt's Raazi | Hindi Movie Review | Murugan Manthiram

Image
Raazi | Hindi Movie | Alia Bhatt நாடுகளுக்கு இடையே உள்ள உறவு பற்றி விவரிக்கவும் விமர்சிக்கவுமே நமக்கு சரியாகத் தெரியாத போது, நாடுகளுக்கு இடையேயான உளவு மற்றும் உளவாளி(SPY) பற்றி எப்படி விவரிப்பது, விமர்சிப்பது?. ஆனாலும் இந்தப்படத்தில் எனக்கு புரிந்ததை சொல்கிறேன். Raazi ஒரு இந்திய உளவு பற்றிய திரைப்படம். இந்திய உளவாளி பற்றிய திரைப்படம். பொதுவாகவே நான் அதிகமாக கேள்விப்பட்டவை அமெரிக்க, ரஷ்ய உளவுப்படங்கள் தான். இந்திய பாகிஸ்தான், பாகிஸ்தான் இந்திய உளவுப்படங்கள், இதற்கு முன்னால் எத்தனை வந்திருக்கிறது என்பது எனக்குத் தெரியவில்லை. அலியா பட்… பிடிக்கும் என்பது தான் இந்தப்படம் பார்க்க முதல் காரணம். இருந்தாலும் கூகுள்காரி, இந்த படத்திற்கு நல்ல விமர்சனம் இருக்கிறது என்று சொன்னது இரண்டாம் காரணம். அலியா பட், ஜெய்தீப், விக்கி கௌசல், அம்ருதா கான்வில்கர், சிஸிர் சர்மா என நடிகர்கள் தேர்வும் நடிப்பும் சிறப்பு. இந்தியா பாகிஸ்தான் எல்லைப்பகுதியாக காட்டுகின்ற மலைப்பகுதிகள் எத்தனை அழகாக இருக்கின்றன. ஒரு நாட்டை பலவீனப்படுத்துவதற்காக உளவு பார்ப்பது, தன் நாட்டை பாதுகாப்பதற்காக உளவு பார்ப்பது எ...

கடுகு | ஒரு தவறான படம். அதை சூர்யா தயாரிக்கலாமா?

நடிகர் சூர்யா கவனத்திற்கு... சினிமா என்கிற வீரியமிக்க கலையை, தொழில்நுட்பத்தை வைத்துக்கொண்டு அரைத்த மாவையே கொஞ்சம் டெக்னிக்கலாக தமிழ் சினிமா அரைக்கும்போது நிறைய ஆதங்கமாக இருக்கும். ஓடுகிற படங்கள் கூட பெரும்பாலும் யதார்த்தம் இல்லாமல் சினிமாத்தனங்களுடன் இருக்கும் நிலையில் சினிமாவையும் சமூகத்தையும் பிரதிபலிக்கிற, சினிமாவையும் சமூகத்தையும் அடுத்த கட்டத்திற்கு நகர்த்துகிற திரைப்படங்கள் ஒரு சிலவாவது வரவேண்டும் என்ற ஆதங்கம் நீண்ட நாட்களாகவே இருந்தது. அதையும் மீறி கடுகு போல ஒரு சில படங்கள் வந்தாலும் முக்கால் வாசி படத்திற்கு பின், முழுவதும் சினிமாவாகி மசாலா வாசம் தியேட்டரைத்தாண்டி வீடு வரை வந்துவிடுகிறது. இன்னொன்று கடுகு படம் பேசிய உளவியல்…. மிக மிக மோசமான உளவியல்… இந்த சமூகம் பெண்கள் மீது திணிக்கிற புனித அழுக்கின் இன்னொரு சாட்சி தான் கடுகு. இடைநிலை பள்ளிக்கல்வி பயிலும் ஒரு சிறுமியை அமைச்சராக இருக்கும் அரசியல்வாதி ஒருவன், உள்ளுர் அரசியல்வாதியின் துணையுடன் பாலியல் வன்புணர்வு கொள்ள முயல்கையில் கதைநாயகி கதாபாத்திரத்தின் உதவியால் பாலியல் வன்புணர்வில் இருந்து தப்பிக்கிறாள். அதில் பித்துபிடித...

"குற்றப்பரம்பரை"களை உருவாக்கிய குற்றவாளிகள் யார்?

Image
"குற்றப்பரம்பரை"களை உருவாக்கிய குற்றவாளிகள் யார்? "தீரன் அதிகாரம் ஒன்று" படம் எழுப்பும் கேள்விகள். ஓய்வறியா பெருந்தேடலும் உழைப்பும், "தீரன் அதிகாரம் ஒன்று". ஓய்வறியா பெருந்தேடலும் உழைப்பும்... இந்த வாக்கியம் "தீரன் அதிகாரம் ஒன்று" படத்தின் இயக்குநருக்கு மிகச்சரியாக பொருந்தும். அடுத்து அவரால் உருவாக்கப்பட்ட கதாபாத்திரம் தீரனுக்கும் மிகச்சரியாக பொருந்தும். அத்தனை புள்ளி விவரங்கள், தேடல்கள், தகவல்கள்... என மெனக்கெட்டிருக்கிறார்கள். தமிழ் சினிமாவில் வரலாற்றை ஆய்வு செய்து இவ்வளவு விவரங்கள் கொடுப்பதில் வினோத் கைதேர்ந்தவராயிருக்கிறார். உதாரணத்திற்கு இரத்தக்கறை படிந்த கத்தியை காவலர்கள் எடுக்க வேண்டிய முறை. கதாநாயகன் கார்த்தி உள்பட படத்தில் நடித்தவர்கள் பற்றி பாராட்டவேண்டியதைத்தாண்டி இந்த படம் பற்றி நிறைய பேசலாம். விவாதிக்கலாம். ரசிகனாக, மக்களாக ஒரு படத்தை கொண்டாடுவதும் திட்டுவதும் மட்டுமே நம் வேலை அல்ல. அதையும் தாண்டி அந்த படங்கள் உருவாக்கும் அரசியலை விவாதங்களுக்கு எடுத்துச்செல்ல வேண்டும். இந்த படத்தில் நாம் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள நிற...