Posts

Showing posts with the label கட்டுரைகள்

சாதி முரண், என்பது சாதாரணமானதல்ல, அது ஒரு உளவியல் போர்.

Image
சாதி முரண், என்பது சாதாரணமானதல்ல, அது ஒரு உளவியல் போர்.  யாரையும் எதிர்த்து நிற்பது என் நோக்கமல்ல , உங்களுடன் கைகோர்த்து உங்கள் பக்கத்தில் அமர்ந்து உரையாடுவதையே நான் விரும்புகிறேன் . - பா. இரஞ்சித்   அம்பேத்கரைப் புரிந்துகொள்வது அவ்வளவு எளிதானதல்ல. மானுடத்தை, சமூக நீதியை, சமூக சமத்துவத்தை ஏற்றுக்கொள்ள முடியாத எவராலும் நிச்சயமாக அம்பேத்கரைப் புரிந்துகொள்ளவே முடியாது. புரிந்துகொள்வதே அத்தனைக்கடினம் என்றால், அம்பேத்கர் வழி நடப்பதென்பது இன்னும் கடினமானது. சுயசாதிப் பெருமைகள், சுயமத தம்பட்டங்கள், ஆணாதிக்க மனோபாவங்கள், வர்க்க பேதங்கள், பாலின பேதங்கள், உழைப்புச்சுரண்டல்... இப்படி அனைத்தையும் தனக்குள்ளே வைத்துக்கொண்டு அம்பேத்கர் வழி நடப்பதென்பதும் நடப்பதாக காட்டிக்கொள்வதும் கேலிக்கூத்தாகவே இருக்கும். ஏனெனில் அம்பேத்கர் அப்படிப்பட்ட ஒரு ஆளுமை அல்ல. அம்பேத்கர் வேறு எவரும் நிகரில்லாத ஒரு மானுட சிந்தனையாளர். சமகாலத்தில் அம்பேத்கரைப் பற்றிய சரியான புரிதலோடு அம்பேத்கரின் வழியில் நடக்கும் மிகச்சிலரில் முக்கியமான ஒருவராக சகோதரன் பா.இரஞ்சித்தைப் பார்க்கிறேன். தன் ...

தேவதைப் பொழுதுகளின் பழி வாங்கும் படலம்! - முருகன்மந்திரம்

Image
  தேவதைப் பொழுதுகளின் பழி வாங்கும் படலம்! # முருகன்மந்திரம் காதல் வந்தவர்களுக்கும் காதலுக்குள் வந்தவர்களுக்கும் காதலோடு வரப்போகிறவர்களுக்கும்… இந்த தேவதைப் பொழுதுகளை சமர்ப்பிக்கிறேன். இது கடந்த காலத்தின் போர்… நான் தொலைத்த தேதிகளின் புரட்சி… நான் இழந்த நேற்றுகளின் வன்மம்… நான் உடைத்த நிமிடங்களின் வஞ்சம்… திரும்பக் கிடைக்காத தேவதைப் பொழுதுகளின் பழி வாங்கும் படலம்… அழகின் தலைவியும் அவளது தோட்டப் பூக்களும் போர் வீரர்களாய் திரண்டு வரும் மெல்யுத்தம்… மென்யுத்தம். போரை வழி நடத்தி வருவது அவளே தான்… தீராத பேராசையாய் பெருகி வழியும் எங்கள் காதலின் வலிமையை நீண்ட வாளாக வார்த்தெடுத்து… எல்லைகளற்ற எங்கள் பேரன்பை... அந்த வாளின் கூர்மையாக்கி… பூமியின் அதிஅற்புதமான வாசம் கொண்ட பூக்களைக்கொண்டு செய்யப்பட்ட கவசங்களை மாசற்ற மரகத மலர் மார்புகளில் தாங்கி… களத்தில் நிற்கிறாள் அவள்… இந்தப் போரின் முதல்வி… என் காதல் தலைவி… என் காதலி. ஒற்றைக்கண்ணில்  என் மீதான ஓராயிரம் யுகத்தின் காதலையும்… மற்றைக் கண்ணில் என்னை ஒரே நொடியில் தீய்த்துச் சாம்பலாக்கி விடும்… பெருங் கோபத்தையும்… சு...