தேவதைப் பொழுதுகளின் பழி வாங்கும் படலம்! - முருகன்மந்திரம்
தேவதைப் பொழுதுகளின் பழி வாங்கும் படலம்!
காதல் வந்தவர்களுக்கும்
காதலுக்குள் வந்தவர்களுக்கும்
காதலோடு வரப்போகிறவர்களுக்கும்…
இந்த தேவதைப் பொழுதுகளை சமர்ப்பிக்கிறேன்.
காதலுக்குள் வந்தவர்களுக்கும்
காதலோடு வரப்போகிறவர்களுக்கும்…
இந்த தேவதைப் பொழுதுகளை சமர்ப்பிக்கிறேன்.
இது கடந்த காலத்தின் போர்…
நான் தொலைத்த தேதிகளின் புரட்சி…
நான் இழந்த நேற்றுகளின் வன்மம்…
நான் உடைத்த நிமிடங்களின் வஞ்சம்…
நான் தொலைத்த தேதிகளின் புரட்சி…
நான் இழந்த நேற்றுகளின் வன்மம்…
நான் உடைத்த நிமிடங்களின் வஞ்சம்…
திரும்பக் கிடைக்காத
தேவதைப் பொழுதுகளின்
பழி வாங்கும் படலம்…
தேவதைப் பொழுதுகளின்
பழி வாங்கும் படலம்…
அழகின் தலைவியும்
அவளது தோட்டப் பூக்களும்
போர் வீரர்களாய் திரண்டு வரும்
மெல்யுத்தம்… மென்யுத்தம்.
அவளது தோட்டப் பூக்களும்
போர் வீரர்களாய் திரண்டு வரும்
மெல்யுத்தம்… மென்யுத்தம்.
போரை வழி நடத்தி வருவது அவளே தான்…
தீராத பேராசையாய் பெருகி வழியும்
எங்கள் காதலின் வலிமையை
நீண்ட வாளாக வார்த்தெடுத்து…
எல்லைகளற்ற எங்கள் பேரன்பை...
அந்த வாளின் கூர்மையாக்கி…
எங்கள் காதலின் வலிமையை
நீண்ட வாளாக வார்த்தெடுத்து…
எல்லைகளற்ற எங்கள் பேரன்பை...
அந்த வாளின் கூர்மையாக்கி…
பூமியின் அதிஅற்புதமான வாசம் கொண்ட பூக்களைக்கொண்டு செய்யப்பட்ட கவசங்களை
மாசற்ற மரகத மலர் மார்புகளில் தாங்கி…
களத்தில் நிற்கிறாள் அவள்…
மாசற்ற மரகத மலர் மார்புகளில் தாங்கி…
களத்தில் நிற்கிறாள் அவள்…
இந்தப் போரின் முதல்வி…
என் காதல் தலைவி…
என் காதலி.
என் காதல் தலைவி…
என் காதலி.
ஒற்றைக்கண்ணில்
என் மீதான ஓராயிரம் யுகத்தின் காதலையும்…
மற்றைக் கண்ணில்
என்னை ஒரே நொடியில்
தீய்த்துச் சாம்பலாக்கி விடும்…
பெருங் கோபத்தையும்…
சுமந்தபடி…
திமிறி நிற்கிறாள் அவள்…
மற்றைக் கண்ணில்
என்னை ஒரே நொடியில்
தீய்த்துச் சாம்பலாக்கி விடும்…
பெருங் கோபத்தையும்…
சுமந்தபடி…
திமிறி நிற்கிறாள் அவள்…
சுழலும் கருவிழிகளில்
கொப்பளிக்கும் கோபமே
ஆயிரம் சூரியன்களின் துண்டுகளாகி
என்னைத் துரத்தி தீய்க்க வருகிறது…
கொப்பளிக்கும் கோபமே
ஆயிரம் சூரியன்களின் துண்டுகளாகி
என்னைத் துரத்தி தீய்க்க வருகிறது…
தீயாய் சரிகிறேன் நான்..
தீயோடு சரிகிறேன் நான்…
சுற்றி நெருப்பிருந்தும்
என் சுண்டுவிரலைக் கூட சுடவில்லை…
அவளின் காதல் தீ…
தீயோடு சரிகிறேன் நான்…
சுற்றி நெருப்பிருந்தும்
என் சுண்டுவிரலைக் கூட சுடவில்லை…
அவளின் காதல் தீ…
ஆகாயம் பார்த்தபடி
வீழ்ந்து கிடக்கும் என் மார்பில்…
என் முத்தங்களுக்காக நீண்ட தவம் கிடந்த…
அவளது வலது காலின் தங்கப்பாதம்…
வீழ்ந்து கிடக்கும் என் மார்பில்…
என் முத்தங்களுக்காக நீண்ட தவம் கிடந்த…
அவளது வலது காலின் தங்கப்பாதம்…
அந்தப் பாதத்தின் பெருவிரலால்
ஒரே ஒருமுறை அழுத்தினாலே போதும்…
மங்கள்யான் போல
மாசக்கணக்கில் பயணிப்பேன் நான்,,,
ஒரே ஒருமுறை அழுத்தினாலே போதும்…
மங்கள்யான் போல
மாசக்கணக்கில் பயணிப்பேன் நான்,,,
ஒரே ஒரு வித்தியாசம்…
மங்கள்யான் வான்தாண்டி சென்றது…
நான் பூமி தோண்டி புதைவேன்.
மங்கள்யான் வான்தாண்டி சென்றது…
நான் பூமி தோண்டி புதைவேன்.
உறுதி செய்யப்பட்டு விட்ட
என் குற்றங்களுக்கு…
எப்போதோ தரப்பட்டிருக்க வேண்டும் தண்டனை…
என் குற்றங்களுக்கு…
எப்போதோ தரப்பட்டிருக்க வேண்டும் தண்டனை…
தண்டனையை நிறைவேற்றாமல்
காலத்தை கடத்துவது
தண்டனையை விட
கொடுமையான தண்டனை…
என்று என்னவள் அறிவாளோ
அறியாளோ நானறியேன்…
காலத்தை கடத்துவது
தண்டனையை விட
கொடுமையான தண்டனை…
என்று என்னவள் அறிவாளோ
அறியாளோ நானறியேன்…
பேரோளியாய்
என் கண்களில் இருந்து
அவளை நோக்கிப் பாய்கிறது
அவள் மீது நான் கொண்ட காதல்…
என் கண்களில் இருந்து
அவளை நோக்கிப் பாய்கிறது
அவள் மீது நான் கொண்ட காதல்…
அடுத்த நிமிடமே
அவளைத் தொடமுடியாத
அந்தப் பேரோளி
புகை மண்டலமாகி
அவளைச் சுற்றி நின்று கதறுகிறது…
அவளைத் தொடமுடியாத
அந்தப் பேரோளி
புகை மண்டலமாகி
அவளைச் சுற்றி நின்று கதறுகிறது…
தண்டனையை சீக்கிரமாய் நிறைவேற்று
என்று அவளின் கால்களில் விழுந்து கெஞ்சுகிறது
என் காதல்…
என்று அவளின் கால்களில் விழுந்து கெஞ்சுகிறது
என் காதல்…
மன்னிப்பேனடா மன்னவனே…
மிச்சம் வைக்காமல் காதலிப்போம்
எழுந்து வாடா என்னவனே…
என்கிறது அவளின் கண்கள்…
மிச்சம் வைக்காமல் காதலிப்போம்
எழுந்து வாடா என்னவனே…
என்கிறது அவளின் கண்கள்…
நீதியின் தடுமாற்றம்…
சத்தியத்தின் சங்கடம்…
தீர்ப்பெழுத வந்தவள்… திகைத்து நிற்கிறாள்…
பகை முடித்து பழி தீர்க்க வந்தவள், பதறி நிற்கிறாள்…
சத்தியத்தின் சங்கடம்…
தீர்ப்பெழுத வந்தவள்… திகைத்து நிற்கிறாள்…
பகை முடித்து பழி தீர்க்க வந்தவள், பதறி நிற்கிறாள்…
என்ன தான் நான் செய்த குற்றம்…??
என் ஒருவனுக்கு எதிராக ஏன் இந்த பெரும்போர்?
என் ஒருவனுக்கு எதிராக ஏன் இந்த பெரும்போர்?
விவரிக்கிறேன். காதுகளை விரித்து கேளுங்கள். நான் செய்தது ஒரே ஒரு குற்றமல்ல… பலப்பல குற்றங்கள்…
பாவங்கள் என்றாலும் பாதகமில்லை.
பாவங்கள் என்றாலும் பாதகமில்லை.
என்னைப்போலவே இன்று நீங்கள் அந்த குற்றங்களை செய்து கொண்டிருக்கலாம்… அல்லது நான் செய்த அந்த பாவங்களை நாளை நீங்கள் செய்யலாம்…
ஆகையால்… இந்தக் காதல் குற்றப்பத்திரிக்கையின் காயங்களின் பட்டியலை கொஞ்சம் கூர்மையாக கவனியுங்கள்… இந்தப் பாவப்பட்டியலை நிதானமாக வாசித்து குறிப்பெடுத்துக்கொள்ளுங்கள்…
காதலிப்பதற்காக
அவள் தந்த பொழுதுகளை
விளையாட்டாய் கழித்தது…
அவள் தந்த பொழுதுகளை
விளையாட்டாய் கழித்தது…
நேசிப்பதற்காக
அவள் நிர்ணயித்த நிமிடங்களை
விவாதித்து,
வெட்டிக்கதை பேசி வீணடித்தது…
அவள் நிர்ணயித்த நிமிடங்களை
விவாதித்து,
வெட்டிக்கதை பேசி வீணடித்தது…
உருகிப் பெருகிய காதலை
அவள் வசம் ஒப்படைக்காமல்
உள்ளுக்குள்ளே ஒளித்துக்கொண்டது….
அவள் வசம் ஒப்படைக்காமல்
உள்ளுக்குள்ளே ஒளித்துக்கொண்டது….
பிணைந்து பிழிந்து
சத்தமின்றி சாறாக்கி,
பரவசத்தோடு
பருகி இருக்க வேண்டிய காதலை,
கனியாகும் வரை காத்திருக்க விட்டு…
காயப்படுத்தியது…
சத்தமின்றி சாறாக்கி,
பரவசத்தோடு
பருகி இருக்க வேண்டிய காதலை,
கனியாகும் வரை காத்திருக்க விட்டு…
காயப்படுத்தியது…
கனியான பின்னும்
கண்டுகொள்ளாமல் அழுக வைத்தது…
அழ வைத்தது…
கண்டுகொள்ளாமல் அழுக வைத்தது…
அழ வைத்தது…
காத்திருக்க வைத்து
ஏமாற்றிய பொழுதுகளில் எல்லாம்
காலத்தை காரணம் காட்டியது…
ஏமாற்றிய பொழுதுகளில் எல்லாம்
காலத்தை காரணம் காட்டியது…
வாழ்க்கையே நீ தான்
என்று ஒப்பித்து விட்டு…
வாழ்க்கை கையில் வந்தபோது…
சராசரி வாழ்வின் தேவைகளை நோக்கி
ஓடிக்கொண்டே இருந்தது…
என்று ஒப்பித்து விட்டு…
வாழ்க்கை கையில் வந்தபோது…
சராசரி வாழ்வின் தேவைகளை நோக்கி
ஓடிக்கொண்டே இருந்தது…
வேலை வேலை வேலை…
என்று வீராப்பு காட்டியது…
என்று வீராப்பு காட்டியது…
காதலின் பெருமழையாய்,
என்னில் நனைய வா என
அவள் கைநீட்டி அழைத்தபோது,
மழையின் சுகம் தவிர்த்து…
மரத்தடி தேடி
மடத்தனமாய் ஒதுங்கி நின்றது…
என்னில் நனைய வா என
அவள் கைநீட்டி அழைத்தபோது,
மழையின் சுகம் தவிர்த்து…
மரத்தடி தேடி
மடத்தனமாய் ஒதுங்கி நின்றது…
தாகங்களே மேகங்களாகி
தழுவிக்கொள்ள தாபத்தோடு
மிதந்து வந்தபோது
தடைகள் போட்டு தள்ளி வைத்தது…
தழுவிக்கொள்ள தாபத்தோடு
மிதந்து வந்தபோது
தடைகள் போட்டு தள்ளி வைத்தது…
வெட்கத்தின் மொட்டுக்கள்
முத்தங்களாய் பூத்தபோது,
பறித்துக்கொள் என
பார்வைகளால் பேசிய போது…
விபரம் புரியாமல் வேடிக்கை பார்த்தது…
முத்தங்களாய் பூத்தபோது,
பறித்துக்கொள் என
பார்வைகளால் பேசிய போது…
விபரம் புரியாமல் வேடிக்கை பார்த்தது…
காதலின் கதவுக்குப் பின்னே
தயங்கித் தயங்கி
தமிழ் பெண்ணாய்
எட்டிப்பார்த்த காமத்திற்கு
சம உரிமை தராமல் சாத்திரம் பேசியது…
தயங்கித் தயங்கி
தமிழ் பெண்ணாய்
எட்டிப்பார்த்த காமத்திற்கு
சம உரிமை தராமல் சாத்திரம் பேசியது…
சண்டைகளுக்கு மத்தியில்
சமாதானங்களை வரவிடாமல்
வறட்டு வீராப்பில் வக்கணைகள் பேசியது…
சமாதானங்களை வரவிடாமல்
வறட்டு வீராப்பில் வக்கணைகள் பேசியது…
காதலே செய்யத்தெரியாத
இவனின் கால்களில் கிடந்து
கதறிய காதலின்
குற்றப்பபத்திரிக்கை இது…
உங்களுக்கான கண்ணீர் எச்சரிக்கை இது.
…………
என் குற்றங்களின் பட்டியல் உங்களை கொதிக்க வைத்திருக்கும்… என் மீது கொண்ட காதலால் கோடி முறை கொதித்து கொதித்து கனன்றுகொண்டிருக்கும் அவளின் கோபத்தின் முன் மண்டியிடுகிறேன். என்னை மன்னிப்பதென்பது காதலுக்கு செய்யும் துரோகம்.
இவனின் கால்களில் கிடந்து
கதறிய காதலின்
குற்றப்பபத்திரிக்கை இது…
உங்களுக்கான கண்ணீர் எச்சரிக்கை இது.
…………
என் குற்றங்களின் பட்டியல் உங்களை கொதிக்க வைத்திருக்கும்… என் மீது கொண்ட காதலால் கோடி முறை கொதித்து கொதித்து கனன்றுகொண்டிருக்கும் அவளின் கோபத்தின் முன் மண்டியிடுகிறேன். என்னை மன்னிப்பதென்பது காதலுக்கு செய்யும் துரோகம்.
எனக்கு தெரியும்… நீங்கள் புறப்பட்டிருப்பீர்கள்… உங்கள் கைகளில் அகப்பட்ட ஆயுதங்களை அள்ளிக்கொண்டு போர்க்களத்திற்கு புறப்பட்டிருப்பீர்கள்…
வாருங்கள்… விரைந்து வந்து சேருங்கள்… தண்டனையை நிறைவேற்ற முடியாமல் தளர்ந்து நிற்கும் அவளுக்கு தன்னம்பிக்கை தாருங்கள்.
காதலுக்கெதிரான என் கொடூரக் குற்றங்கள்… மன்னிக்கப்பட முடியாதது என்று அவளுக்கு அறிவுறுத்துங்கள்…
உங்களின் வார்த்தைகள், அவளுக்கு என்னைத் தண்டிக்கும் தைரியத்தைத் தரட்டும். அவள் காலடியில் கிடக்கும் இந்தப் பாவப்பிறவிக்கு முடிவுரை எழுதட்டும்..
நிறைவேறட்டும் தண்டனை…
நிமிரட்டும் காதல்…
நிமிரட்டும் காதல்…
நட்சத்திரங்களே
வாண வேடிக்கைகளாய் ஒளிரட்டும்…
காதலின் தேசம் என் தண்டனையை கொண்டாடட்டும்…
வாண வேடிக்கைகளாய் ஒளிரட்டும்…
காதலின் தேசம் என் தண்டனையை கொண்டாடட்டும்…
நரகாசூரனை அழித்துவிட்டதாக சொல்லப்பட்ட கதைக்காக, காலங்ககாலமாக தீபாவளி கொண்டாடிக்கொண்டிருப்பவர்களே… நான் அழிக்கப்பட்டதை காதலின் தீபாவளியாக கொண்டாடுங்கள்…
என்னைப் போன்ற காதல் துரோகிகளுக்கு
உயிர்ப்பிச்சை போட்டால்,
இந்த பிரபஞ்சம் இருளின் இருப்பிடமாகி விடும்…
காதல் இல்லாத கருப்பு காடாகி விடும்…
தேவதைகளால் சபிக்கப்பட்ட பால்வீதிகளாகி விடும்…
உயிர்ப்பிச்சை போட்டால்,
இந்த பிரபஞ்சம் இருளின் இருப்பிடமாகி விடும்…
காதல் இல்லாத கருப்பு காடாகி விடும்…
தேவதைகளால் சபிக்கப்பட்ட பால்வீதிகளாகி விடும்…
எனக்கு தரப்படும் இந்த தண்டனை பார்த்து காதல் தேவதைகளின் கண்களில் இருந்து ஆனந்தக் கண்ணீர் பெருகட்டும். அந்த ஆனந்தக்கண்ணீர், என் இரத்தத்தோடு கலந்து புனிதமானதொரு காதல் நதியாய் புறப்படட்டும்… அந்த நதி பிரபஞ்ச வீதிகளில் நுரைத்து பொங்கிப் பாயட்டும்.
என்னைப்போல காதலிக்கத் தெரியாமல் , தேவதைகளின் இதயங்களை காயப்படுத்திக்கொண்டிருப்பவர்கள், அந்தக் காதல் நதியில் குளித்து… விமோச்சனம் பெறுங்கள்.
காதலைக் கொண்டாடுங்கள்…
காதலை வணங்குங்கள்…
காதலோடு இருங்கள்…
காதலாக இருங்கள்…
காதலை வணங்குங்கள்…
காதலோடு இருங்கள்…
காதலாக இருங்கள்…
நான் வருவேன்.
இன்னும்
ஆயிரமாயிரம் பிறவிகள் எடுத்து
மீண்டும் மீண்டும் வருவேன்.
இன்னும்
ஆயிரமாயிரம் பிறவிகள் எடுத்து
மீண்டும் மீண்டும் வருவேன்.
நீங்கள் யாருமில்லாத
ஒரு அழகான வனத்தில்…
என் மார்பில் அவள் மார்புரச
காதலோடு அவளைச் சுமந்தபடி..
ஒரு அழகான வனத்தில்…
என் மார்பில் அவள் மார்புரச
காதலோடு அவளைச் சுமந்தபடி..
காதல் நதியின் மேலே
நான் மிதந்து கொண்டிருப்பேன்…
நான் மிதந்து கொண்டிருப்பேன்…
அந்தக் காதல் நதி
எங்களை சுமந்துகொண்டே
பயணிக்கும்
யுகம் யுகமாய்!.
எங்களை சுமந்துகொண்டே
பயணிக்கும்
யுகம் யுகமாய்!.
-முருகன் மந்திரம்
தங்கம், மார்ச் மாத இதழில் வெளியாகி உள்ளது,
Thangam Magazine
Thangam Magazine
Comments
Post a Comment