Posts

Showing posts with the label Murugan Manthiram Reviews

Alia Bhatt's Raazi | Hindi Movie Review | Murugan Manthiram

Image
Raazi | Hindi Movie | Alia Bhatt நாடுகளுக்கு இடையே உள்ள உறவு பற்றி விவரிக்கவும் விமர்சிக்கவுமே நமக்கு சரியாகத் தெரியாத போது, நாடுகளுக்கு இடையேயான உளவு மற்றும் உளவாளி(SPY) பற்றி எப்படி விவரிப்பது, விமர்சிப்பது?. ஆனாலும் இந்தப்படத்தில் எனக்கு புரிந்ததை சொல்கிறேன். Raazi ஒரு இந்திய உளவு பற்றிய திரைப்படம். இந்திய உளவாளி பற்றிய திரைப்படம். பொதுவாகவே நான் அதிகமாக கேள்விப்பட்டவை அமெரிக்க, ரஷ்ய உளவுப்படங்கள் தான். இந்திய பாகிஸ்தான், பாகிஸ்தான் இந்திய உளவுப்படங்கள், இதற்கு முன்னால் எத்தனை வந்திருக்கிறது என்பது எனக்குத் தெரியவில்லை. அலியா பட்… பிடிக்கும் என்பது தான் இந்தப்படம் பார்க்க முதல் காரணம். இருந்தாலும் கூகுள்காரி, இந்த படத்திற்கு நல்ல விமர்சனம் இருக்கிறது என்று சொன்னது இரண்டாம் காரணம். அலியா பட், ஜெய்தீப், விக்கி கௌசல், அம்ருதா கான்வில்கர், சிஸிர் சர்மா என நடிகர்கள் தேர்வும் நடிப்பும் சிறப்பு. இந்தியா பாகிஸ்தான் எல்லைப்பகுதியாக காட்டுகின்ற மலைப்பகுதிகள் எத்தனை அழகாக இருக்கின்றன. ஒரு நாட்டை பலவீனப்படுத்துவதற்காக உளவு பார்ப்பது, தன் நாட்டை பாதுகாப்பதற்காக உளவு பார்ப்பது எ...

அருவி, உச்சம் தொடும் அன்பின் கொடி!

Image
அருவி, உச்சம் தொடும் அன்பின் கொடி! அருவி, கண்களுக்குள் உன்னை மீண்டும் மீண்டும் கொட்டி நிறைத்துக்கொள்கிறேன் அருவி. அப்பாவின் வாசம் தொடரும் சிறுமகளாய் நீ மழலை பேசுகையில்… மனதில் பாதி அப்பாவாகவும் மீதி மகளாகவும ஆனேன். # அதிதிபாலன் , உனக்கு அப்பா, அம்மா வைத்த பெயர். # அருவி அருண் பிரபு புருஷோத்தமன் வைத்த பெயர். ‘அதிதி’, ‘அருவி’யாய் மாறிய அற்புதம், திரையெங்கும் உணர்வின் வண்ணங்களாய் நிறைந்து வழிகிறது. உதடுகள் திறக்காமல் புன்னகைக்க வைக்கிறாய், ஊமையாகி உள்ளுக்குள்ளே புலம்ப வைக்கிறாய். வாய்விட்டு சிரிக்க நடுவில் நகைச்சுவை தருகிறாய்… சின்னச் சின்னக் குறும்புகளால் ரசிக்க வைக்கிறாய். சினம் கொண்டு சீறுகையில் சிந்தனைக்குள் தள்ளுகிறாய். திரையில் நீயும் எதிரில் நானும் இடைவெளிகள் இருந்தாலும் என் அருகில் வந்து கதைக்கிறாய். ஒன்றரை மணி நேரம் உயிருக்குள் என்னென்னவோ விதைக்கிறாய். இதயம் வலிக்க இமைகள் பனிக்க கண்ணீர் உப்புநீராய் விழுகிறாய். இவை எல்லாம் தாண்டி…. உச்சம் தொடும் அன்பின் கொடியென உயர்ந்து பறக்கிறாய்! இன்று மட்டுமல்ல, என்றென்றும் தமிழ் சினிமாவின் தனிக்கொடியாய் உயர்ந்து ...

சாய்ரட் இயக்குனரின் கள்ளத்தனம்! உள்ளே சிரிக்கும் அநீதி? – பாடலாசிரியர் முருகன் மந்திரம்

Image
பாலிவுட் என்கிற இந்தி சினிமாவின் தலைநகரமான மும்பை தான், மராத்திய சினிமாவிற்கும் தலைநகரம் என்றாலும், இந்தி திரைப்படங்கள் போல மராத்திய திரைப்படங்கள் மிகப்பெரிய வணிக எல்லைகளுக்குள் சென்றதில்லை. கடந்த மாதம் வெளியான மராத்திய மொழி திரைப்படம், சாய்ரட்(SAIRAT) அதை சாத்தியப்படுத்தி இருக்கிறது. சாய்ரட் என்றால் காட்டுமிராண்டித்தனம் என்று பொருளாம். நான்கு கோடியில் தயாரிக்கப்பட்டு 100 கோடி வசூல் சாதனை படைத்திருக்கிறது சாய்ரட். இந்தி சினிமாவை மிரள வைத்து… இந்தி சினிமா பிரபலங்களை புகழ வைத்திருக்கிறது, “சாய்ரட்”. அப்படி என்ன தான் கதை… காதல்… காதலைத் தவிர வேறொன்றுமில்லை. அர்ச்சி (அ) அர்ச்சனா என்கிற பாட்டீல் இன பெண்ணுக்கும் பர்ஸ்யா என்கிற பிரசாந்த் காலே ஆகிய தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த வாலிபனுக்கும் இடையேயான காதலின் தொடக்கமும் முடிவும் தான் சாய்ரட். அர்ச்சியாக நடித்திருக்கும் அந்த சற்றே பூசி மெழுகிற உடலழகி… துடிப்பான திமிரழகி…. ரிங்கு ராஜ்குருவை கதையின் நாயகன் மட்டுமல்ல… நீங்களும் காதலிக்கத் தொடங்கி விடுவீர்கள். பார்வை. நடை, உடை, பாவனை, என எந்தப்பக்கம் திரும்பினாலும் திகட்டாமல் ரசித்துக்கொண்டே ...

பேசாப்பொருளை பேசும் பாண்டி. பவர் பாண்டி!.

Image
பிக்கு, பீகே, பிங்க், சாய்ராட், ஸ்பார்ச்சிட் என வட இந்திய படங்களும் அங்கமாலி டைரீஸ், டேக் ஆப் என தென்னிந்திய படங்களுமாக இந்தி சினிமாவும் மலையாள சினிமாவும் ரொம்பவே பொறாமைப்பட வைக்கும். சினிமா என்கிற வீரியமிக்க கலையை, தொழில்நுட்பத்தை வைத்துக்கொண்டு அரைத்த மாவையே கொஞ்சம் டெக்னிக்கலாக தமிழ் சினிமா அரைக்கும்போது நிறைய ஆதங்கமாக இருக்கும். ஓடுகிற படங்கள் கூட பெரும்பாலும் யதார்த்தம் இல்லாமல் சினிமாத்தனங்களுடன் இருக்கும் நிலையில் சினிமாவையும் சமுகத்தையும் பிரதிபலிக்கிற, சினிமாவையும் சமுகத்தையும் அடுத்த கட்டத்திற்கு நகர்த்துகிற திரைப்படங்கள் ஒரு சிலவாவது வரவேண்டும் என ஆதங்கம் நீண்ட நாட்களாகவே இருந்தது. அதையும் மீறி கடுகு போல ஒரு சில படங்கள் வந்தாலும் முக்கால் வாசி படத்திற்கு பின், முழுவதும் சினிமாவாகி மசாலா வாசம் தியேட்டரைததாண்டி வீடு வரை வந்துவிடுகிறது. இன்னொன்று கடுகு படம் பேசிய உளவியல்…. மிக மிக மோசமான உளவியல்… இந்த சமூகம் பெண்கள் திணிக்கிற புனித அழுக்கின் இன்னொரு சாட்சி தான் கடுகு. இடைநிலை பள்ளிக்கல்வி பயிலும் ஒரு சிறுமியை அமைச்சராக இருக்கும் அரசியல்வாதி ஒருவன், உள்ளுர் அரசியல்...

கடுகு | ஒரு தவறான படம். அதை சூர்யா தயாரிக்கலாமா?

நடிகர் சூர்யா கவனத்திற்கு... சினிமா என்கிற வீரியமிக்க கலையை, தொழில்நுட்பத்தை வைத்துக்கொண்டு அரைத்த மாவையே கொஞ்சம் டெக்னிக்கலாக தமிழ் சினிமா அரைக்கும்போது நிறைய ஆதங்கமாக இருக்கும். ஓடுகிற படங்கள் கூட பெரும்பாலும் யதார்த்தம் இல்லாமல் சினிமாத்தனங்களுடன் இருக்கும் நிலையில் சினிமாவையும் சமூகத்தையும் பிரதிபலிக்கிற, சினிமாவையும் சமூகத்தையும் அடுத்த கட்டத்திற்கு நகர்த்துகிற திரைப்படங்கள் ஒரு சிலவாவது வரவேண்டும் என்ற ஆதங்கம் நீண்ட நாட்களாகவே இருந்தது. அதையும் மீறி கடுகு போல ஒரு சில படங்கள் வந்தாலும் முக்கால் வாசி படத்திற்கு பின், முழுவதும் சினிமாவாகி மசாலா வாசம் தியேட்டரைத்தாண்டி வீடு வரை வந்துவிடுகிறது. இன்னொன்று கடுகு படம் பேசிய உளவியல்…. மிக மிக மோசமான உளவியல்… இந்த சமூகம் பெண்கள் மீது திணிக்கிற புனித அழுக்கின் இன்னொரு சாட்சி தான் கடுகு. இடைநிலை பள்ளிக்கல்வி பயிலும் ஒரு சிறுமியை அமைச்சராக இருக்கும் அரசியல்வாதி ஒருவன், உள்ளுர் அரசியல்வாதியின் துணையுடன் பாலியல் வன்புணர்வு கொள்ள முயல்கையில் கதைநாயகி கதாபாத்திரத்தின் உதவியால் பாலியல் வன்புணர்வில் இருந்து தப்பிக்கிறாள். அதில் பித்துபிடித...

"குற்றப்பரம்பரை"களை உருவாக்கிய குற்றவாளிகள் யார்?

Image
"குற்றப்பரம்பரை"களை உருவாக்கிய குற்றவாளிகள் யார்? "தீரன் அதிகாரம் ஒன்று" படம் எழுப்பும் கேள்விகள். ஓய்வறியா பெருந்தேடலும் உழைப்பும், "தீரன் அதிகாரம் ஒன்று". ஓய்வறியா பெருந்தேடலும் உழைப்பும்... இந்த வாக்கியம் "தீரன் அதிகாரம் ஒன்று" படத்தின் இயக்குநருக்கு மிகச்சரியாக பொருந்தும். அடுத்து அவரால் உருவாக்கப்பட்ட கதாபாத்திரம் தீரனுக்கும் மிகச்சரியாக பொருந்தும். அத்தனை புள்ளி விவரங்கள், தேடல்கள், தகவல்கள்... என மெனக்கெட்டிருக்கிறார்கள். தமிழ் சினிமாவில் வரலாற்றை ஆய்வு செய்து இவ்வளவு விவரங்கள் கொடுப்பதில் வினோத் கைதேர்ந்தவராயிருக்கிறார். உதாரணத்திற்கு இரத்தக்கறை படிந்த கத்தியை காவலர்கள் எடுக்க வேண்டிய முறை. கதாநாயகன் கார்த்தி உள்பட படத்தில் நடித்தவர்கள் பற்றி பாராட்டவேண்டியதைத்தாண்டி இந்த படம் பற்றி நிறைய பேசலாம். விவாதிக்கலாம். ரசிகனாக, மக்களாக ஒரு படத்தை கொண்டாடுவதும் திட்டுவதும் மட்டுமே நம் வேலை அல்ல. அதையும் தாண்டி அந்த படங்கள் உருவாக்கும் அரசியலை விவாதங்களுக்கு எடுத்துச்செல்ல வேண்டும். இந்த படத்தில் நாம் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள நிற...