வள்ளியூரிலிருந்து வந்த பாட்டு மந்திரம்! திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூருக்கு அருகில்உள்ள அம்மச்சிக்கோயில் என்கிற சிறிய கிராமம்தான் முருகன் மந்திரம் பிறந்த ஊர். அப்பா மந்திரம் இசக்கிமுத்து. லலிதா, ஜெயக்கொடி என முருகன் மந்திரத்துக்கு இரண்டு அம்மாக்கள் அமைந்தார்கள். பெரிய அம்மாவுக்குத் திருமணம் ஆகி 10 வருடங்களுக்கு மேலாகியும் குழந்தை இல்லாததால், தன் தங்கையை கணவருக்கு மணமுடித்து வைத்தார், அதன் பின் இருவருக்கும் குழந்தைகள் பிறந்து, ஒரே வீட்டில் இன்று வரை வாழ்க்கை தொடர்கிறது. ஏழு குழந்தைகளில் நான்காவதாகப் பிறந்த இவருக்கு பள்ளிக்காலத்திலேயே சினிமா மீது ஆர்வம் வந்துவிட்டது. சினிமாவே வாழ்க்கை என்பதை 11வது வகுப்பு படிக்கும்போது முடிவு செய்துவிட்டார்.11வது வகுப்பில் , தமிழ் ஆசிரியர் லில்லி சரோஜா ‘தலைவன், தோழி, காதல், பசலை, இற்செறித்தல், களவு, கற்பு’ என சங்க இலக்கியப் பாடல்களைப்பற்றி மரத்தடி வகுப்புகளில் விளக்கியபோது இவருக்கு இலக்கிய ஈடுபாடு வந்தது. பிழைப்பு தேடி மும்பைக்குப் போன முருகன், பின்னர் சென்னைக்கு வந்து, பாடலாசிரியர் விக்டர்தாஸ் உதவியாளராக சில காலம் பணியாற்றினார். பாடல்க...
சாதி முரண், என்பது சாதாரணமானதல்ல, அது ஒரு உளவியல் போர். யாரையும் எதிர்த்து நிற்பது என் நோக்கமல்ல , உங்களுடன் கைகோர்த்து உங்கள் பக்கத்தில் அமர்ந்து உரையாடுவதையே நான் விரும்புகிறேன் . - பா. இரஞ்சித் அம்பேத்கரைப் புரிந்துகொள்வது அவ்வளவு எளிதானதல்ல. மானுடத்தை, சமூக நீதியை, சமூக சமத்துவத்தை ஏற்றுக்கொள்ள முடியாத எவராலும் நிச்சயமாக அம்பேத்கரைப் புரிந்துகொள்ளவே முடியாது. புரிந்துகொள்வதே அத்தனைக்கடினம் என்றால், அம்பேத்கர் வழி நடப்பதென்பது இன்னும் கடினமானது. சுயசாதிப் பெருமைகள், சுயமத தம்பட்டங்கள், ஆணாதிக்க மனோபாவங்கள், வர்க்க பேதங்கள், பாலின பேதங்கள், உழைப்புச்சுரண்டல்... இப்படி அனைத்தையும் தனக்குள்ளே வைத்துக்கொண்டு அம்பேத்கர் வழி நடப்பதென்பதும் நடப்பதாக காட்டிக்கொள்வதும் கேலிக்கூத்தாகவே இருக்கும். ஏனெனில் அம்பேத்கர் அப்படிப்பட்ட ஒரு ஆளுமை அல்ல. அம்பேத்கர் வேறு எவரும் நிகரில்லாத ஒரு மானுட சிந்தனையாளர். சமகாலத்தில் அம்பேத்கரைப் பற்றிய சரியான புரிதலோடு அம்பேத்கரின் வழியில் நடக்கும் மிகச்சிலரில் முக்கியமான ஒருவராக சகோதரன் பா.இரஞ்சித்தைப் பார்க்கிறேன். தன் ...
Comments
Post a Comment