பிடித்திழுத்து "இச்"சித்து ’ | முருகன் மந்திரம் கவிதைகள்
பிடித்திழுத்து "இச்"சித்து
இதழீரம் துடைத்து
இன்பூறிய நிகழ்வுகள் உண்டு.
தழுவல்களுக்கும்
முத்தங்களுக்கும் மட்டுமே
அனுமதித்த நிலை மீறி
ஆடை அவிழ்க்க
முயற்சித்த நினைவுகள் உண்டு.
வன்மையாய் கடித்து
வலியில் நீ முனகினால்
வீரம் என்றெண்ணி
வலிந்து கடித்து
வேவு பார்த்த நிமிடங்கள் உண்டு.
அதே நீ.
அதே நான்.
அதுவே மீண்டும் நடக்கலாம்.
மீண்டும் மீண்டும் நடக்கலாம்.
ஆனால்,
இனி,
முன் அனுமதியும்
உன் அனுமதியும்
முழுதாய் பெற்று
மூச்சு முட்ட
உன்னை சுவாசிக்கலாம்
என்றிருக்கிறேன்.
உணவு
உடை
உறைவிடம்
உயிர்க்காற்று
அனைத்தும் நீயாக...
அது நிறைவேறும்,
அனுமதிக்கப்பட்ட நாட்களில்
மட்டும்!
- முருகன் மந்திரம்
#MuruganManthiram #MMPoems #MMKavithai
Comments
Post a Comment