தீராத காதலும் நானும்...
பிழைப்புக்காக வேலை தேடி மும்பை சென்று வெற்றிகரமாக தோல்வியோடு திரும்பி மீண்டும் சொந்த ஊருக்கு சென்று எங்கெங்கோ நாட்கள் கழிந்தாலும்... சினிமா மீதான என்னுடைய தீராத காதல் மட்டும் கொஞ்சம் கூட குறையவே இல்லை.
நிறைய நம்பிக்கை... அதை விட நிறைய பயம் இதுதான் நான். நண்பர்கள் என்னை விட என்னை அபாரமாக நம்பி உன்னால் முடியும் என்று ஆயிரம் சத்தியங்கள் செய்தபிறகும் நான் கையாலாகாதவனாக இன்னும் நாட்களை நகர்த்திக்கொண்டிருக்கிறேன். என்னை சோம்பேறி என்று சொல்லிக்கொள்வதா... அல்லது முயற்சிகள் செய்யாமலேயே முடிவுகளை பற்றி யோசித்துக் கொண்டிருக்கும் அதிமேதாவி என்பதா... இல்லை ஆற அமர யோசித்து செயல்படும் அறிவாளி என்று சொல்வதா என்பதில் எனக்கு குழப்பம் தீர்ந்த பாடில்லை.
நல்ல படங்களை பார்க்கும் போதும் நாசமான படங்களை பார்க்கும் போதும் எனக்குள் உள்ள நான் பொங்கி மேல் எழுவதைப் பார்க்கிறேன்.
Comments
Post a Comment