எரிச்சல் படுத்தும் சென்னை திரையரங்குகள்
சென்னை என்பது தமிழ்நாட்டின் தலைநகரம் மட்டுமல்ல. தமிழ் சினிமாவின் தலைநகரமும் கூட. அப்படிப்பட்ட சென்னையில் உள்ள சில தியேட்டர்களுக்கு குடும்பத்தோடு படம் பார்க்கச்செல்லும்போது ஏற்படும் அனுபவங்கள் எரிச்சல் ஏற்படுத்துவதோடு மட்டுமல்லாமல் நம்மை கோபம் கொள்ளச்செய்கின்றன. 2012 ருத்ரம் என்று ஒரு படம். குடும்பத்தோடு பார்ப்பதற்காக எஸ்.எஸ்.ஆர்.பங்கஜம் தியேட்டருக்கு சென்றேன். இருக்கைகளின் சென்று அமர்வதற்காக அவர்கள் போட்டு வைத்திருக்கும் நடை பாதை வழுக்கு மரத்தை விடவும் கொடுமையாக இருக்கிறது. அதோடு போதுமான விளக்கு வெளிச்சமும் இல்லாததால் மிகவும் செங்குத்தாக இறங்குவது போல உள்ள அந்த பாதையில் கண்டிப்பாக நம்மால் விழாமல் நடக்க முடியாது. அப்படி விழாமல் நடக்கவேண்டும் என்றால் ஒரு சர்க்கஸ் காரனின் லாவகம் நமக்கு வேண்டும். இடைவேளை சமயத்தில் தியேட்டர் ஊழியர் ஒருவர் ஒரு பெண்ணிடம் தரமில்லாத வார்த்தைகளா...