Posts

Showing posts from 2017

அருவி, உச்சம் தொடும் அன்பின் கொடி!

Image
அருவி, உச்சம் தொடும் அன்பின் கொடி! அருவி, கண்களுக்குள் உன்னை மீண்டும் மீண்டும் கொட்டி நிறைத்துக்கொள்கிறேன் அருவி. அப்பாவின் வாசம் தொடரும் சிறுமகளாய் நீ மழலை பேசுகையில்… மனதில் பாதி அப்பாவாகவும் மீதி மகளாகவும ஆனேன். # அதிதிபாலன் , உனக்கு அப்பா, அம்மா வைத்த பெயர். # அருவி அருண் பிரபு புருஷோத்தமன் வைத்த பெயர். ‘அதிதி’, ‘அருவி’யாய் மாறிய அற்புதம், திரையெங்கும் உணர்வின் வண்ணங்களாய் நிறைந்து வழிகிறது. உதடுகள் திறக்காமல் புன்னகைக்க வைக்கிறாய், ஊமையாகி உள்ளுக்குள்ளே புலம்ப வைக்கிறாய். வாய்விட்டு சிரிக்க நடுவில் நகைச்சுவை தருகிறாய்… சின்னச் சின்னக் குறும்புகளால் ரசிக்க வைக்கிறாய். சினம் கொண்டு சீறுகையில் சிந்தனைக்குள் தள்ளுகிறாய். திரையில் நீயும் எதிரில் நானும் இடைவெளிகள் இருந்தாலும் என் அருகில் வந்து கதைக்கிறாய். ஒன்றரை மணி நேரம் உயிருக்குள் என்னென்னவோ விதைக்கிறாய். இதயம் வலிக்க இமைகள் பனிக்க கண்ணீர் உப்புநீராய் விழுகிறாய். இவை எல்லாம் தாண்டி…. உச்சம் தொடும் அன்பின் கொடியென உயர்ந்து பறக்கிறாய்! இன்று மட்டுமல்ல, என்றென்றும் தமிழ் சினிமாவின் தனிக்கொடியாய் உயர்ந்து ...

சாய்ரட் இயக்குனரின் கள்ளத்தனம்! உள்ளே சிரிக்கும் அநீதி? – பாடலாசிரியர் முருகன் மந்திரம்

Image
பாலிவுட் என்கிற இந்தி சினிமாவின் தலைநகரமான மும்பை தான், மராத்திய சினிமாவிற்கும் தலைநகரம் என்றாலும், இந்தி திரைப்படங்கள் போல மராத்திய திரைப்படங்கள் மிகப்பெரிய வணிக எல்லைகளுக்குள் சென்றதில்லை. கடந்த மாதம் வெளியான மராத்திய மொழி திரைப்படம், சாய்ரட்(SAIRAT) அதை சாத்தியப்படுத்தி இருக்கிறது. சாய்ரட் என்றால் காட்டுமிராண்டித்தனம் என்று பொருளாம். நான்கு கோடியில் தயாரிக்கப்பட்டு 100 கோடி வசூல் சாதனை படைத்திருக்கிறது சாய்ரட். இந்தி சினிமாவை மிரள வைத்து… இந்தி சினிமா பிரபலங்களை புகழ வைத்திருக்கிறது, “சாய்ரட்”. அப்படி என்ன தான் கதை… காதல்… காதலைத் தவிர வேறொன்றுமில்லை. அர்ச்சி (அ) அர்ச்சனா என்கிற பாட்டீல் இன பெண்ணுக்கும் பர்ஸ்யா என்கிற பிரசாந்த் காலே ஆகிய தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த வாலிபனுக்கும் இடையேயான காதலின் தொடக்கமும் முடிவும் தான் சாய்ரட். அர்ச்சியாக நடித்திருக்கும் அந்த சற்றே பூசி மெழுகிற உடலழகி… துடிப்பான திமிரழகி…. ரிங்கு ராஜ்குருவை கதையின் நாயகன் மட்டுமல்ல… நீங்களும் காதலிக்கத் தொடங்கி விடுவீர்கள். பார்வை. நடை, உடை, பாவனை, என எந்தப்பக்கம் திரும்பினாலும் திகட்டாமல் ரசித்துக்கொண்டே ...

Maamanukku Athaimaram - மாமனுக்கு அத்தை மரம் பாடல் வீடியோ

Image
Maamanukku Athaimaram Kekkiraan Meikkiran மாமனுக்கு அத்தை மரம் கேக்கிறான் மேய்க்கிறான்

VISHAL ANTHEM விஷால் ஆன்ந்தம்

Image
VISHAL ANTHEM விஷால் ஆன்ந்தம் / முருகன் மந்திரம்

Thikki Thenarudhu Devathai | Video Song

Image
Thikki Thenarudhu Devathai | Video Song திக்கித் தெணறுது தேவதை பாடல் வீடியோ

பேசாப்பொருளை பேசும் பாண்டி. பவர் பாண்டி!.

Image
பிக்கு, பீகே, பிங்க், சாய்ராட், ஸ்பார்ச்சிட் என வட இந்திய படங்களும் அங்கமாலி டைரீஸ், டேக் ஆப் என தென்னிந்திய படங்களுமாக இந்தி சினிமாவும் மலையாள சினிமாவும் ரொம்பவே பொறாமைப்பட வைக்கும். சினிமா என்கிற வீரியமிக்க கலையை, தொழில்நுட்பத்தை வைத்துக்கொண்டு அரைத்த மாவையே கொஞ்சம் டெக்னிக்கலாக தமிழ் சினிமா அரைக்கும்போது நிறைய ஆதங்கமாக இருக்கும். ஓடுகிற படங்கள் கூட பெரும்பாலும் யதார்த்தம் இல்லாமல் சினிமாத்தனங்களுடன் இருக்கும் நிலையில் சினிமாவையும் சமுகத்தையும் பிரதிபலிக்கிற, சினிமாவையும் சமுகத்தையும் அடுத்த கட்டத்திற்கு நகர்த்துகிற திரைப்படங்கள் ஒரு சிலவாவது வரவேண்டும் என ஆதங்கம் நீண்ட நாட்களாகவே இருந்தது. அதையும் மீறி கடுகு போல ஒரு சில படங்கள் வந்தாலும் முக்கால் வாசி படத்திற்கு பின், முழுவதும் சினிமாவாகி மசாலா வாசம் தியேட்டரைததாண்டி வீடு வரை வந்துவிடுகிறது. இன்னொன்று கடுகு படம் பேசிய உளவியல்…. மிக மிக மோசமான உளவியல்… இந்த சமூகம் பெண்கள் திணிக்கிற புனித அழுக்கின் இன்னொரு சாட்சி தான் கடுகு. இடைநிலை பள்ளிக்கல்வி பயிலும் ஒரு சிறுமியை அமைச்சராக இருக்கும் அரசியல்வாதி ஒருவன், உள்ளுர் அரசியல்...

கடுகு | ஒரு தவறான படம். அதை சூர்யா தயாரிக்கலாமா?

நடிகர் சூர்யா கவனத்திற்கு... சினிமா என்கிற வீரியமிக்க கலையை, தொழில்நுட்பத்தை வைத்துக்கொண்டு அரைத்த மாவையே கொஞ்சம் டெக்னிக்கலாக தமிழ் சினிமா அரைக்கும்போது நிறைய ஆதங்கமாக இருக்கும். ஓடுகிற படங்கள் கூட பெரும்பாலும் யதார்த்தம் இல்லாமல் சினிமாத்தனங்களுடன் இருக்கும் நிலையில் சினிமாவையும் சமூகத்தையும் பிரதிபலிக்கிற, சினிமாவையும் சமூகத்தையும் அடுத்த கட்டத்திற்கு நகர்த்துகிற திரைப்படங்கள் ஒரு சிலவாவது வரவேண்டும் என்ற ஆதங்கம் நீண்ட நாட்களாகவே இருந்தது. அதையும் மீறி கடுகு போல ஒரு சில படங்கள் வந்தாலும் முக்கால் வாசி படத்திற்கு பின், முழுவதும் சினிமாவாகி மசாலா வாசம் தியேட்டரைத்தாண்டி வீடு வரை வந்துவிடுகிறது. இன்னொன்று கடுகு படம் பேசிய உளவியல்…. மிக மிக மோசமான உளவியல்… இந்த சமூகம் பெண்கள் மீது திணிக்கிற புனித அழுக்கின் இன்னொரு சாட்சி தான் கடுகு. இடைநிலை பள்ளிக்கல்வி பயிலும் ஒரு சிறுமியை அமைச்சராக இருக்கும் அரசியல்வாதி ஒருவன், உள்ளுர் அரசியல்வாதியின் துணையுடன் பாலியல் வன்புணர்வு கொள்ள முயல்கையில் கதைநாயகி கதாபாத்திரத்தின் உதவியால் பாலியல் வன்புணர்வில் இருந்து தப்பிக்கிறாள். அதில் பித்துபிடித...

Murugan Manthiram Interview | 1Yes TV

Image
Murugan Manthiram Interview | 1Yes TV முருகன் மந்திரம் பேட்டி

Murugan Manthiram's Speech Ozhikkeettru about Dr.Ambedkar in Velicham Tv PART 3: Reading Habit n Documentation

Image
Murugan Manthiram's Speech Ozhikkeettru about Dr.Ambedkar in Velicham Tv PART 3: Reading Habit n Documentation வெளிச்சம் தொலைக்காட்சியில் ஒளிக்கீற்று நிகழ்ச்சியில் புரட்சியாளர் அம்பேத்கர் பற்றி முருகன் மந்திரம் பேச்சு. பகுதி 3: வாசித்தல் மற்றும் ஆவணப்படுத்துதல்

Murugan Manthiram's Speech Ozhikkeettru about Dr.Ambedkar in Velicham Tv Part 2 - Self Thinking

Image
Murugan Manthiram's Speech Ozhikkeettru about Dr.Ambedkar in Velicham Tv Part 2 - Self Thinking வெளிச்சம் தொலைக்காட்சியில் ஒளிக்கீற்று நிகழ்ச்சியில் புரட்சியாளர் அம்பேத்கர் பற்றி முருகன் மந்திரம் பேச்சு. பகுதி 2 : சுயசிந்தனை

Murugan Manthiram's Speech Ozhikkeettru about Dr.Ambedkar in Velicham Tv PART 1: Patience

Image
Murugan Manthiram's Speech Ozhikkeettru about Dr.Ambedkar in Velicham Tv  PART 1: Patience வெளிச்சம் தொலைக்காட்சியில் ஒளிக்கீற்று நிகழ்ச்சியில் புரட்சியாளர் அம்பேத்கர் பற்றி முருகன் மந்திரம் பேச்சு. பகுதி 1: பொறுமை

"குற்றப்பரம்பரை"களை உருவாக்கிய குற்றவாளிகள் யார்?

Image
"குற்றப்பரம்பரை"களை உருவாக்கிய குற்றவாளிகள் யார்? "தீரன் அதிகாரம் ஒன்று" படம் எழுப்பும் கேள்விகள். ஓய்வறியா பெருந்தேடலும் உழைப்பும், "தீரன் அதிகாரம் ஒன்று". ஓய்வறியா பெருந்தேடலும் உழைப்பும்... இந்த வாக்கியம் "தீரன் அதிகாரம் ஒன்று" படத்தின் இயக்குநருக்கு மிகச்சரியாக பொருந்தும். அடுத்து அவரால் உருவாக்கப்பட்ட கதாபாத்திரம் தீரனுக்கும் மிகச்சரியாக பொருந்தும். அத்தனை புள்ளி விவரங்கள், தேடல்கள், தகவல்கள்... என மெனக்கெட்டிருக்கிறார்கள். தமிழ் சினிமாவில் வரலாற்றை ஆய்வு செய்து இவ்வளவு விவரங்கள் கொடுப்பதில் வினோத் கைதேர்ந்தவராயிருக்கிறார். உதாரணத்திற்கு இரத்தக்கறை படிந்த கத்தியை காவலர்கள் எடுக்க வேண்டிய முறை. கதாநாயகன் கார்த்தி உள்பட படத்தில் நடித்தவர்கள் பற்றி பாராட்டவேண்டியதைத்தாண்டி இந்த படம் பற்றி நிறைய பேசலாம். விவாதிக்கலாம். ரசிகனாக, மக்களாக ஒரு படத்தை கொண்டாடுவதும் திட்டுவதும் மட்டுமே நம் வேலை அல்ல. அதையும் தாண்டி அந்த படங்கள் உருவாக்கும் அரசியலை விவாதங்களுக்கு எடுத்துச்செல்ல வேண்டும். இந்த படத்தில் நாம் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள நிற...

படைப்பாளன் என்பவன் யாரெனில்....

வணக்கம், ஒரு எழுத்தாளன் எப்போது படைப்பாளன் ஆகிறான் என்றால், அவனது எழுத்தில் நேர்மையும் அறமும் ஒன்றாக பிணைந்திருக்கும்போது. நல்ல எழுத்தாளன் எவனுக்கும் தனது ஒவ்வொரு எழுத்தின் எதிர்வினை பற்றியும் அது வாசிக்கிறவனுக்கு என்ன தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது பற்றியும் தெரியவேண்டும். நான் எழுதுவது என்ன செய்யும் என்று எனக்கே தெரியாது என்றால், நான் எழுத்தாளன் அல்ல. அது எழுத்தும் அல்ல. ஆனால், கோட்பாடுகளோடு எழுதுகிறவன் அவனுடைய ஒவ்வொரு எழுத்தும் என்ன செய்யும், செய்யவேண்டும் என்பதை அவனே தீர்மானிக்கிறான். மொழி கைவரப்பெற்றவன் எல்லாம் படைப்பாளி அல்ல.அதைப்போலவே எழுத்தாளன்கள் எல்லாருமே நல்லவன் என்றும் சிந்தனைவாதிகள் என்றும் சமூக அக்கறை கொண்டவன்கள் என்றும் நினைக்கவேண்டியதும் இல்லை. மொழிகளை மிக லாவகமாக கையாளும் எழுத்தாளன்களில் பெரும்பகுதி கிட்டத்தட்ட கிரிமினல்களே. படைப்பாளி என்ற போர்வைக்குள் இருந்துகொண்டு படைப்புகள் என்பவற்றின் வழியாக தங்களது கோட்பாடுகளையும் விருப்பங்களையும் தேவைகளையும் விஷங்களாக திணிப்பவர்களே. ஒரு கதையோ கவிதையோ கட்டுரையோ எழுதி முடித்தபின் அதில் இதைத்தான் நான் முன்னிறுத்துகிற...

Thalaivan Varugiraan | Vishal Anthem by Murugan Manthiram

Image
Thalaivan Varugiraan | Vishal Anthem by Murugan Manthiram

பிடித்திழுத்து "இச்"சித்து ’ | முருகன் மந்திரம் கவிதைகள்

Image
பிடித்திழுத்து "இச்"சித்து இதழீரம் துடைத்து இன்பூறிய நிகழ்வுகள் உண்டு. தழுவல்களுக்கும் முத்தங்களுக்கும் மட்டுமே அனுமதித்த நிலை மீறி ஆடை அவிழ்க்க முயற்சித்த நினைவுகள் உண்டு. வன்மையாய் கடித்து வலியில் நீ முனகினால் வீரம் என்றெண்ணி வலிந்து கடித்து வேவு பார்த்த நிமிடங்கள் உண்டு. அதே நீ. அதே நான். அதுவே மீண்டும் நடக்கலாம். மீண்டும் மீண்டும் நடக்கலாம். ஆனால், இனி, முன் அனுமதியும் உன் அனுமதியும் முழுதாய் பெற்று மூச்சு முட்ட உன்னை சுவாசிக்கலாம் என்றிருக்கிறேன். உணவு உடை உறைவிடம் உயிர்க்காற்று அனைத்தும் நீயாக... அது நிறைவேறும், அனுமதிக்கப்பட்ட நாட்களில் மட்டும்! - முருகன் மந்திரம் #MuruganManthiram #MMPoems #MMKavithai

கவிப்பேரரசு வைரமுத்து அவர்களுக்கு ஒரு கடிதம். - முருகன் மந்திரம்

Image
A Letter to Kavignar Vairamuthu கவிப்பேரரசு அவர்களுக்கு வணக்கம், நான் பாடலாசிரியன் ஆனதன் பின்னணியில் வெறெந்த பாடலாசிரியைரை விடவும் உங்கள் பங்கு தான் அதிகம். ஏனெனில் வாழ்க்கை முழுவதும் இளையராஜா பாடல்களையே அதிகமாக கேட்கும் பாக்கியம் பெற்ற எத்தனையோ கோடி தமிழர்களில் நானும் ஒருவன். இளையராஜா பாடல்கள் என்றால் நீங்கள் இல்லாமல் எப்படி? உங்கள் பாடல்கள் என்றால் இளையராஜா இல்லாமல் எப்படி? ஆகையால், இளையராஜாவின் மெட்டுகளோடு உங்கள் வார்த்தைகளை, வரிகளை ரசிக்கத்தொடங்கிய அந்த ரசனை, உங்களின் அனைத்து படைப்புகளுக்கும் பாடல்களுக்குமாய் விரிந்தது. அப்படியாக நான் பாடலாசிரியனாக மாறியதன் பின்னணியில் நீங்கள் இருப்பதை நான் எப்போதும் பெருமைக்குரியதாகவே கருதுகிறேன். கருதுவேன். சமீபத்தில் ஒரு இலக்கிய இதழில் உங்களின் ஒரு பேட்டியை வாசிக்க நேர்ந்தது. அதில் இரண்டு கேள்விகளுக்கான உங்கள் பதில்கள்… என்னை இப்படி பின்வருமாறு எழுத வைத்தது. கேள்வி 1: கிராமம் சார்ந்த, வட்டார அழகியல் மிக்க உங்கள் படைப்புகளில் கிராமத்தின் சாதிய முரண்களைப் பார்க்க முடியவில்லையே? அதைப் பதிவுசெய்வது குறித்து உங்கள் மனநிலை என்ன? உங்கள் பதில்: “எனது இ...

Murugan Manthiram's Thikki Thenarudhu Devathai Song from VU.

Image
Murugan Manthiram's Thikki Thenarudhu Devathai Song from VU.

Lyricist Murugan Manthiram Speaks About Engeyum Naan Iruppen Songs

Image
Lyricist Murugan Manthiram Speaks About Engeyum Naan Iruppen Songs - TOC

Murugan Manthiram Profile & Songs List

Image
வள்ளியூரிலிருந்து வந்த பாட்டு மந்திரம்! திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூருக்கு அருகில்உள்ள அம்மச்சிக்கோயில் என்கிற சிறிய கிராமம்தான் முருகன் மந்திரம் பிறந்த ஊர். அப்பா மந்திரம் இசக்கிமுத்து. லலிதா, ஜெயக்கொடி என முருகன் மந்திரத்துக்கு இரண்டு அம்மாக்கள் அமைந்தார்கள். பெரிய அம்மாவுக்குத் திருமணம் ஆகி 10 வருடங்களுக்கு மேலாகியும் குழந்தை இல்லாததால், தன் தங்கையை கணவருக்கு மணமுடித்து வைத்தார், அதன் பின் இருவருக்கும் குழந்தைகள் பிறந்து, ஒரே வீட்டில் இன்று வரை வாழ்க்கை தொடர்கிறது. ஏழு குழந்தைகளில் நான்காவதாகப் பிறந்த இவருக்கு பள்ளிக்காலத்திலேயே சினிமா மீது ஆர்வம் வந்துவிட்டது. சினிமாவே வாழ்க்கை என்பதை 11வது வகுப்பு படிக்கும்போது முடிவு செய்துவிட்டார்.11வது வகுப்பில் , தமிழ் ஆசிரியர் லில்லி சரோஜா ‘தலைவன், தோழி, காதல், பசலை, இற்செறித்தல், களவு, கற்பு’ என சங்க இலக்கியப் பாடல்களைப்பற்றி மரத்தடி வகுப்புகளில் விளக்கியபோது இவருக்கு இலக்கிய ஈடுபாடு வந்தது. பிழைப்பு தேடி மும்பைக்குப் போன முருகன், பின்னர் சென்னைக்கு வந்து, பாடலாசிரியர் விக்டர்தாஸ் உதவியாளராக சில காலம் பணியாற்றினார். பாடல்க...