"கற்றது தமிழ்" , விற்றது தமிழ் மானம்!
கற்றது தமிழ் இயக்குனர் ராம் பற்றி பேச்செடுத்தாலே தாறுமாறா கோவம் வருது.
சும்மா கிடந்த சங்கை ஊதிக்கெடுத்தானாம் ஆண்டின்னு ஊர்ப்பக்கம் சொல்வாங்க. ஏற்கனவே தமிழ் பத்தி பேசுனா, தமிழ்ல பேசுனா இங்க ஒரு பய மதிக்க மாட்டான். இதுல இந்த புண்ணியவாளன் வந்து தமிழ் படிச்சவன் கிறுக்கனா அலைறான்னு ஒரு படம் எடுத்து வச்சி மெல்லத் தமிழ் இனி சாகட்டும்னு ஒரு சாபம் விட்டுட்டு போயிட்டாரு.
விஜய் டிவியில ஒருநாள் நீயா? நானா?வில் இதுதான் விவாதம். நீங்கள் தமிழ் ஏன் படிக்கவில்லை?. அதுக்கு கொஞ்சம் புத்திசாலிகள் சொன்ன பதில்... தமிழ் எங்களுக்கு தேவைப்படவில்லை. தமிழ் படிக்கவேண்டிய அவசியம் இருக்கவில்லை. அதுல ரொம்ப தெளிவா ஒரு பொண்ணு, "கற்றது தமிழ்" பார்த்தீங்கன்னா தமிழ் படிச்சவன் வேலையில்லாம அலைவான் அப்படின்னு உதாரணம் சொல்ல... அட ராமா... படத்துல வந்ததுதான் உண்மைன்னு நம்புற இவங்களை சாத்தவா... இல்ல........... சாத்தவான்னு ஒரு எரிச்சல்.
தமிழை மட்டும் படிச்சவனும் கெட்டுப்போகமாட்டான். தமிழும் படிச்சிக்கிட்டு ஆங்கிலம் படிச்சவனும் கெட்டுப்போக மாட்டான்.
அரசியல் பக்கம் எட்டிப்பாருங்க. தமிழ் சோறு மட்டும் போடாது. சொத்து, சொகம், சொந்த சேனல் எல்லாம் கூட தரும். சினிமா பக்கம் எட்டிப்பாருங்க. சிவாஜி, கமல், வைரமுத்துன்னு சொல்லிக்கிட்டே போய் அந்த வரிசையில இந்த ராமையும் சேர்த்துக்கலாம். இவங்களை தமிழ் தானே வாழ வச்சிக்கிட்டிருக்கு. சாலமன் பாப்பையாவும் பட்டிமன்ற ராஜாவும் ரஜினி படத்துல நடிக்க இங்கிலீஷ் தான் காரணமோ. சுஜாதான்னு ஒருத்தரு. ஏரோநாட்டிக்கல் படிச்சவர். ஆனா அதை வச்சி அவர் சம்பாதிக்காத பேர் பணமெல்லாம் தமிழ் தான் சம்பாதிச்சுக்கொடுத்தது. அப்டி சொல்லிக்கிட்டே போலாம்.
யுனிகோட்ல டைப் பண்ணிக்கிட்டிருக்கிற எனக்கே தமிழ்தான் சோறுபோடுது. அப்புறம் தமிழ் படிச்சவன்லாம் உருப்படலன்னு எந்த கூறுகெட்டவன் சொல்றது.
மும்பையில போய் பஸ்ஸோட முன் பக்கத்துல ஆங்கிலத்துன தேடுனா... நீங்க அய்யோ பாவம். இந்தி கூட கிடையாது. மராட்டிலதான் இருக்கும். அங்க வராத வெளிநாட்டுக்காரனா சென்னைக்கு வந்துறப்போறான்.
நீ தமிழ்ல இருந்தாதான் கம்ப்யூட்டர் படிப்பேன்னு சொல்லியிருந்தா பில்கேட்ஸ் அடுத்த நொடியில தமிழ்ல கம்ப்யூட்டரை தயார் பண்ணி தந்திருப்பான்.
ஆங்கிலம் படிச்சவனெல்லாம் அறிவாளின்னும் தமிழ் படிக்கிறவன் கோமாளின்னு ஒரு பெரிய கூட்டமே சொல்லிக்கிட்டு அலையுது. ஐ.டி, ஐ.டி.ன்னு குதிச்சவங்களுக்கெல்லாம் ஓபாமா ஆப்பு வைக்க ஆரம்பிச்சாச்சு. எல்லாமே வேணும். கம்ப்யூட்டர் வேணும், இங்கிலீஷ் வேணும். அதுக்காக தமிழ் தேவையில்லைன்னு சொல்லாதங்கப்பு.
நீ வசதியா வாழலாம். உன்னோட தலைமுறைக்கு பட்டினின்னா என்னன்னு தெரியாமக் கூட போகலாம். ஆனா நீ யார்னு கேட்டா, உன்னோட பூர்விகம் எதுன்னு கேட்டா சொல்லத் தெரியணும்ல. அப்படி ஒரு கேள்விக்கு பதில் சொல்ல முடியாம நீங்க பண்ற தப்புக்கெல்லாம் தண்டனையை உங்க தலைமுறை அனுபவிக்கும். ஏன்னா... அடையாளம் இல்லாம போயிட்டா அவனுக்கு பேர் அனாதை. மெல்ல மெல்ல அனாதை ஆகுறதுக்கு ஐலேசா போடுறீங்க மகா ஜனங்களே. அம்புட்டுதான்.
அப்புறம் ராம் ஐயா, தமிழ் மட்டும் படிச்சிட்டு இருக்கிறவன் பைத்தியக்காரன்... அப்படின்னு சொல்ற மாதிரி எடுத்தீங்களே ஒரு படம். தமிழ் கற்றதுனாலதான் உங்க ஹீரோ அப்படி ஆனாராக்கும். அவனுக்கு குடும்பம் இல்ல. காதலிச்சவ கெடைக்கல. அட செக்ஸ் கூட அனுபவிக்க முடியல. இதுக்கெல்லாம் காரணம் கூட அவன் தமிழ் படிச்சது தானுங்களா அய்யா...
இறந்துபோன எங்கப்பா நினைவா... நான் அடிக்கடி கேட்கிற பாட்டு "பறவையே எங்கு இருக்கிறாய்...". ஆனா அதுக்காகவெல்லாம் உங்க படம் சரின்னு சொல்ல முடியாது. இனிமேலும் இந்த மாதிரி அரைகுறையா பண்ணாதீங்க. இனிமே "வாழ்க்கைக்கு தமிழ் தேவையில்லை"ன்னு கூட ஒரு படம் எடுங்க. அதை இங்கிலீஷ்லயாவது அல்லது உங்களை வாழ வைக்கிற வேற எந்த மொழியிலயாவது எடுங்க.
Comments
Post a Comment