அம்மச்சிக்கோயில் புகைப்படங்கள் | Ammachkoil Photo Gallery
எங்கள் கிராமம் அம்மச்சிக்கோயில் புகைப்படங்கள். 2010 ஜனவரியில் சுத்தமான காற்றை சுவாசித்துக்கொண்டு ஊரோடும் உறவோடும் இரண்டு வாரங்கள் மகிழ்ச்சியாய் இருந்தபோது எடுத்த புகைப்படங்கள்.
அழகான பம்பு செட் குளியல். அப்பப்பா... உடல் முழுவதுமாய்
நனைய நனைய ஒரு அற்புதமான குளியல்.
காலை வேளைளில் இருபக்கமும் வயல்வெளிகளை ரசித்தபடி
நடை பழகும் தண்டவாளம், ஓரமாய் நடைபாதை.
காலை வேளைளில் இருபக்கமும் வயல்வெளிகளை ரசித்தபடி
நடை பழகும் தண்டவாளம், ஓரமாய் நடைபாதை.
நஞ்சை ஒருபக்கம் என்றால்... புஞ்சை இன்னொரு பக்கம்.
புளிய மரங்கள் நிறைந்த விளையின் அருகில் உட்கார்ந்து
இளைப்பாற ஒரு இடம்.
எப்போதோ இறந்து போன தாத்தா ஒருவரின் கல்லறை.
ஒரு மாலைவேளையில் அம்மச்சிக்கோயிலில் இருந்து
மேற்கு நோக்கி பார்த்தபோது சற்று முன்
மேற்குதொடர்ச்சி மலைக்கு பின்னால் சூரியன் ஒளிந்திருந்து.
அந்த அழகை அப்படியே அள்ளிவந்தேன்.
Comments
Post a Comment