அம்மச்சிக்கோயில் புகைப்படங்கள் | Ammachikoil Photo Gallery
தொட்டு விடும் தூரத்தில் சுகம், சொர்க்கம் என்று இதைத்தான் சொல்வார்கள் போல. இயற்கைத்தாயின் இல்லத்தில் இதுதான் குடிநீர் தொட்டி. குளியல் தொட்டி.
நீரோடி உறவாடி... நீரோடி விளையாடி... உருண்டு புரண்டு... முட்டி மோதி... சண்டையிட்டு... தண்ணீரும் காதலியைப் போல... நண்பனைப் போல நம்முடன் கொஞ்சிக் குலவும் சுகம்... அனுபவிக்க கிடைத்தவர்களும் அனுபவிக்க தெரிந்தவர்களும் பாக்கியசாலிகள்.
தண்ணீரும் அடிக்கும்... உங்களுக்கு தெரியுமா?. வேண்டுமென்றால் வயிறு படும்படி அல்லது முதுகு படும்படி விழுந்து பாருங்கள் தெரியும். தண்ணீரின் கைகள் சாட்டைகள் போன்றது. நானும் அவ்வப்போது வாங்கி இருக்கிறது. பல வருடங்களுக்கு முன்னால் வாங்கிய அடி என்றாலும்... இப்போது நினைத்தாலும் வலிப்பது போல ஒரு உணர்வு.
பம்புசெட்டும் பச்சை வயல்காடும்...
பாசமாய் பார்த்துக் கொண்டே இருந்தேன்.
காலைச்சூரியனின் துளித்துளி ஒளியில்
சுத்தமாக தெரியும் வயல்காடு.
ஒத்தையடிப்பாதையென வயலுக்கு நடுவில்
படுத்துக்கிடக்கும் வரப்பு...
வா என்னில் நடந்து பார் என்று என்னை அழைத்தது.
தண்ணீர் நிறைந்த கிணறு.
தாவிக் குதிக்க சொல்லுது மனசு.
ஆழம் அதிகம். அதைவிட குதித்துக் குளிக்கும் சுகம் அதிகம்.
வலது பக்கம் ரெயில்வே கேட்... இடது பக்கம் எங்கள் ஊர்.
வயல்வெளின் மேலாக பாய்ந்து சென்றது என் பார்வை.
வலது பக்கம் ரெயில்வே கேட்... இடது பக்கம் எங்கள் ஊர்.
வயல்வெளின் மேலாக பாய்ந்து சென்றது என் பார்வை.
வயல்வெளியில் மனிதர்கள் நடமாட்டம்.
தண்டவாளத்தில் அனந்தபுரியோ எக்ஸ்பிரஸோ,
கன்னியாகுமரி எக்ஸ்பிரஸோ வருகிறது.
மயக்கும் மாலை பொழுதில்...
எங்கள் ஊர் சூரியன் ஓய்வெடுக்க செல்கிறான்.
அதற்கான வழியனுப்பு விழா தோரணம் தான்...
இந்த இயற்கை அழகு. இருட்டும் அழகு.
எங்கள் ஊரின் தெற்குத்தெரு.
முருகன் மந்திரம் ஆகிய எனது குடில் அரண்மனை
இந்த ராஜவீதியில் தான் அமைந்திருக்கிறது நண்பர்களே.
ஆஹா... ஊர் நெருங்கிவிட்டது.
இந்த ரெயில்வே கேட்டைக் கடந்தால்...
வந்து விட்டது அம்மச்சிக்கோயில்.
சோப்பு, பேஸ்ட், ஷாம்பூ...
எதுவும் இல்லாமல் குளித்தாலும் ஆயிரம் கோடி சுகம்.
உடம்பின் மேல் பட்டு தெறிக்கும் பம்புசெட் தண்ணீர்.
இது ஒரு மினி குற்றால அருவி.
கிராமத்து குளியல்... சுகமான குளியல்.
நஞ்சை வயலுக்கு மிக அருகில்...
ஒரு தாய் தன் செல்லக்குழந்தையை ரசிப்பது போல ரசித்தேன்.
நல்ல வெயிலும் நடுத்தெருவும்
அம்மன் ஆலயத்திலிருந்து பார்த்தேன்.
அடைக்கலம் காத்தாள் அம்மன் ஆலயம்.
ஊரின் நுழைவாயிலில் அமர்ந்திருந்து கண்காணிக்கிறாள்.
எங்களை காத்து நிற்கிறாள்.
அடைக்கலம் காத்தாள் அம்மன் ஆலயம்.
ஊரின் நுழைவாயிலில் அமர்ந்திருந்து கண்காணிக்கிறாள்.
எங்களை காத்து நிற்கிறாள்.
சொர்க்கமே என்றாலும் அது எங்க ஊரு போல வருமா...
Comments
Post a Comment