48வது சென்னை புத்தகக் காட்சி நேற்று முன் தினம் தொடங்கி இருக்கிறது, அனைத்து எழுத்தாளர்களுக்கும் பதிப்பாளர்களுக்கும் புத்தக ஆர்வலர்களுக்கும் எனது அன்பின் வாழ்த்துகள். இந்த புத்தகக் காட்சியில் நான் எழுதிய புத்தகங்கள் இரண்டு இடம் பெற்றிருப்பதில் பெருமகிழ்ச்சி. எனது புத்தகங்கள் கிடைக்குமிடம்: ஒரே ஒரு ராஜா ஒரு கோடி கதைகள் அரங்கு எண் 72, நாற்கரம் பதிப்பகம். கொலசாமியும் கோனிகா மினோல்டாவும் அரங்கு எண் 637, டிரவிடியன் ஸ்டாக் வாய்ப்புள்ள நண்பர்களும் உறவுகளும் புத்தகங்கள் வாங்கி வாசித்து கருத்து பகிருங்கள். அன்பின் நன்றி. பேரன்புடன், முருகன் மந்திரம் #MuruganManthiram #MMBooks #MuruganManthiramBooks #Narkaram #DravidianStock #OreyOruRaajaOruKodiKathaigal #KolasaamiyumKonicaMinoltaavum #books #tamilbooks #ChennaiBookFair #chennaibookfair2025 #atheism #atheists #Ilaiyaraaja #இளையராஜா
Posts
MURUGAN MANTHIRAM SPEECH | MGR MAGAN PRESS ME
- Get link
- X
- Other Apps
By
Murugan Manthiram
-
சித்ராவின் புது ப்ளவுஸ் | சிறுகதை
- Get link
- X
- Other Apps
By
Murugan Manthiram
-
சித்ராவின் புது ப்ளவுஸ்! - முருகன் மந்திரம் சித்ரா இப்பவும் அழகா தான் இருக்கா. ஆனா முன்ன மாதிரி இப்போ பேசுறதில்லை. சித்ரா மகனுக்கு இப்போ பத்து வயசு இருக்கும். ப்ரோ’ன்னு தான் ஆரம்பத்துல கூப்டுவா. அதுக்கு அப்புறம் திக் ப்ரெண்ட் ஆனா. இப்பல்லாம் எப்ப சித்ராவை பார்த்தாலும் அன்னைக்கு அவ அப்டி பண்ணப்போ நானும் சரியா இருந்துருக்கணும். அதுதான் முதல்ல தோணும். அட போடா... இப்போ ஃபீல் பண்ணி எதுக்கு..? மதன் தன்னோடு தானே பேசிக்கொண்டிருக்கிறான். அவன் தனக்கு தானே அடிக்கடி நினைவு படுத்திக்கொள்ளும் அந்த சம்பவம் உங்களுக்கும் தெரிய வேண்டும் என ப்ரியப்படுகிறான். … டிசம்பர் கடைசி நாள். ஊரெல்லாம் ஒரு பரபரப்பும் கொண்டாட்டமும் தெரிந்தது. 12 மணிக்கு இன்னும் முப்பத்தைந்து நிமிடம் இருந்தது. வழக்கமாக சீக்கிரமே உறங்கிவிடும் ஊர்… அன்று விழித்திருந்தது. கொண்டாட்டம் போட காத்திருப்பவர்களும் அவர்களுக்கு கம்பெனி கொடுக்கவும், அவர்களை ரசிப்பதற்கு காத்திருந்தவர்களும் விழித்திருந்தார்கள். மதனின் மனைவி அனிதா குழந்தையுடன் தோழி ஜான்ஸி வீட்டுக்கு சென்றிருந்தாள். தோழி வீட்டில் நியூ இயர் ச...
தலித் அரசியல்: தன்னம்பிக்கையும் தடுமாற்றமும்
- Get link
- X
- Other Apps
By
Murugan Manthiram
-
தலித் அரசியல்: தன்னம்பிக்கையும் தடுமாற்றமும் "ஒரு லட்சியத்தை மேற்கொள்ளுங்கள். அதை அடைவதற்காக விடாமுயற்சியுடன் உழைத்து முன்னேறுங்கள்!". - அம்பேத்கர் இந்திய யூனியன் முழுவதும் தலித்துகள் பெருமளவில் விழிப்படைந்து கொள்ளும் ஒரு நிலை சற்று சமீப காலத்திற்கு முன் தொடங்கியது. இப்போதும் அது வளர்ந்து கொண்டு தான் இருக்கிறது. ஆனால் அப்படி ஒரு சூழல் உருவாகும் போது அதை அடுத்த கட்டத்திற்கு எப்படி எடுத்துச் செல்வது என்பது பற்றி ஆராயாமல் வெறுமனே உணர்வு வயப்பட்ட நிலையில் மட்டுமே தலித் அரசியல் செய்பவர்கள் மற்றும் தலித் அரசியல் பேசுபவர்கள் இருக்கிறார்கள் என்று தான் நான் கூறுவேன். தலித் அரசியல் செய்பவர்கள் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லையே தவிர அதை மிக துல்லியமாக கண்டுபிடித்துவிட்ட தலித் அரசியலின் எதிர் அரசியல்காரர்கள் அதை நீர்த்துப் போகச் செய்வதற்கு பன்முனை தாக்குதல் நடத்துகிறார்கள். கிட்டத்தட்ட அந்த விழிப்பு நிலையை திசை மாற்றுவதில் அவர்கள் வெற்றிக்கு மிக அருகில் இருக்கிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். தலித்துகளுக்கு, தங்களுடைய விழிப்பு நிலையை பற்றி தெளிவான புரிதல் இல்லாமை ஒர...
சாதி முரண், என்பது சாதாரணமானதல்ல, அது ஒரு உளவியல் போர்.
- Get link
- X
- Other Apps
By
Murugan Manthiram
-
சாதி முரண், என்பது சாதாரணமானதல்ல, அது ஒரு உளவியல் போர். யாரையும் எதிர்த்து நிற்பது என் நோக்கமல்ல , உங்களுடன் கைகோர்த்து உங்கள் பக்கத்தில் அமர்ந்து உரையாடுவதையே நான் விரும்புகிறேன் . - பா. இரஞ்சித் அம்பேத்கரைப் புரிந்துகொள்வது அவ்வளவு எளிதானதல்ல. மானுடத்தை, சமூக நீதியை, சமூக சமத்துவத்தை ஏற்றுக்கொள்ள முடியாத எவராலும் நிச்சயமாக அம்பேத்கரைப் புரிந்துகொள்ளவே முடியாது. புரிந்துகொள்வதே அத்தனைக்கடினம் என்றால், அம்பேத்கர் வழி நடப்பதென்பது இன்னும் கடினமானது. சுயசாதிப் பெருமைகள், சுயமத தம்பட்டங்கள், ஆணாதிக்க மனோபாவங்கள், வர்க்க பேதங்கள், பாலின பேதங்கள், உழைப்புச்சுரண்டல்... இப்படி அனைத்தையும் தனக்குள்ளே வைத்துக்கொண்டு அம்பேத்கர் வழி நடப்பதென்பதும் நடப்பதாக காட்டிக்கொள்வதும் கேலிக்கூத்தாகவே இருக்கும். ஏனெனில் அம்பேத்கர் அப்படிப்பட்ட ஒரு ஆளுமை அல்ல. அம்பேத்கர் வேறு எவரும் நிகரில்லாத ஒரு மானுட சிந்தனையாளர். சமகாலத்தில் அம்பேத்கரைப் பற்றிய சரியான புரிதலோடு அம்பேத்கரின் வழியில் நடக்கும் மிகச்சிலரில் முக்கியமான ஒருவராக சகோதரன் பா.இரஞ்சித்தைப் பார்க்கிறேன். தன் ...