பிக்கு, பீகே, பிங்க், சாய்ராட், ஸ்பார்ச்சிட் என வட இந்திய படங்களும் அங்கமாலி டைரீஸ், டேக் ஆப் என தென்னிந்திய படங்களுமாக இந்தி சினிமாவும் மலையாள சினிமாவும் ரொம்பவே பொறாமைப்பட வைக்கும். சினிமா என்கிற வீரியமிக்க கலையை, தொழில்நுட்பத்தை வைத்துக்கொண்டு அரைத்த மாவையே கொஞ்சம் டெக்னிக்கலாக தமிழ் சினிமா அரைக்கும்போது நிறைய ஆதங்கமாக இருக்கும். ஓடுகிற படங்கள் கூட பெரும்பாலும் யதார்த்தம் இல்லாமல் சினிமாத்தனங்களுடன் இருக்கும் நிலையில் சினிமாவையும் சமுகத்தையும் பிரதிபலிக்கிற, சினிமாவையும் சமுகத்தையும் அடுத்த கட்டத்திற்கு நகர்த்துகிற திரைப்படங்கள் ஒரு சிலவாவது வரவேண்டும் என ஆதங்கம் நீண்ட நாட்களாகவே இருந்தது. அதையும் மீறி கடுகு போல ஒரு சில படங்கள் வந்தாலும் முக்கால் வாசி படத்திற்கு பின், முழுவதும் சினிமாவாகி மசாலா வாசம் தியேட்டரைததாண்டி வீடு வரை வந்துவிடுகிறது. இன்னொன்று கடுகு படம் பேசிய உளவியல்…. மிக மிக மோசமான உளவியல்… இந்த சமூகம் பெண்கள் திணிக்கிற புனித அழுக்கின் இன்னொரு சாட்சி தான் கடுகு. இடைநிலை பள்ளிக்கல்வி பயிலும் ஒரு சிறுமியை அமைச்சராக இருக்கும் அரசியல்வாதி ஒருவன், உள்ளுர் அரசியல்...