வள்ளியூரிலிருந்து வந்த பாட்டு மந்திரம்! திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூருக்கு அருகில்உள்ள அம்மச்சிக்கோயில் என்கிற சிறிய கிராமம்தான் முருகன் மந்திரம் பிறந்த ஊர். அப்பா மந்திரம் இசக்கிமுத்து. லலிதா, ஜெயக்கொடி என முருகன் மந்திரத்துக்கு இரண்டு அம்மாக்கள் அமைந்தார்கள். பெரிய அம்மாவுக்குத் திருமணம் ஆகி 10 வருடங்களுக்கு மேலாகியும் குழந்தை இல்லாததால், தன் தங்கையை கணவருக்கு மணமுடித்து வைத்தார், அதன் பின் இருவருக்கும் குழந்தைகள் பிறந்து, ஒரே வீட்டில் இன்று வரை வாழ்க்கை தொடர்கிறது. ஏழு குழந்தைகளில் நான்காவதாகப் பிறந்த இவருக்கு பள்ளிக்காலத்திலேயே சினிமா மீது ஆர்வம் வந்துவிட்டது. சினிமாவே வாழ்க்கை என்பதை 11வது வகுப்பு படிக்கும்போது முடிவு செய்துவிட்டார்.11வது வகுப்பில் , தமிழ் ஆசிரியர் லில்லி சரோஜா ‘தலைவன், தோழி, காதல், பசலை, இற்செறித்தல், களவு, கற்பு’ என சங்க இலக்கியப் பாடல்களைப்பற்றி மரத்தடி வகுப்புகளில் விளக்கியபோது இவருக்கு இலக்கிய ஈடுபாடு வந்தது. பிழைப்பு தேடி மும்பைக்குப் போன முருகன், பின்னர் சென்னைக்கு வந்து, பாடலாசிரியர் விக்டர்தாஸ் உதவியாளராக சில காலம் பணியாற்றினார். பாடல்க...