தமிழ்நாடும் "றமில்நடும்"!.
உலகத்தமிழர்களின் தாய்வீடு, உலகத் தமிழின தலைவர்களின் தந்தைவீடு... பல வெட்டிப்பெருமைகளை நாம் இன்னும் சொல்லிக்கொண்டிருக்கிறோம். செம்மொழி, செம்மை இல்லாத மொழி... எப்படியோ இருக்கட்டும். தமிழ், தமிழ் பேசுபவர்களுக்கு வேறாகவும் அதையே ஆங்கிலத்தில் அதை வாசிக்கும் போது இரண்டுக்கும் சம்பந்தமே இல்லாமலும் இருக்கிறது. தமிழ் என்பது ஆங்கிலத்தில் THAMIZH என்று இருக்கவேண்டும். ஆனால் இப்போது உச்சரித்துக்கொண்டிருப்பது "றமில்"(TAMIL). நாம் இப்போது சொல்லிக்கொண்டிருப்பது "றமில்நடு". இப்படி இதைப்பற்றி பேச ஆரம்பித்தால் சொல்லிக்கொண்டே இருக்கலாம். அப்படி பார்த்தால் உலக மக்களை பொறுத்தவரை நாம் "றமிலியன்ஸ்" (TAMILIANS). அதைப்போல தமிழ்நாடு என்பது ஆங்கிலத்தில் THAMIZH NAADU என்று தான் இருக்க வேண்டும். தமிழுக்கு சேவை செய்பவர்கள் முதலில் இதை மாற்ற முயற்சி செய்யவேண்டும். திரைப்...