Alia Bhatt's Raazi | Hindi Movie Review | Murugan Manthiram
Raazi | Hindi Movie | Alia Bhatt நாடுகளுக்கு இடையே உள்ள உறவு பற்றி விவரிக்கவும் விமர்சிக்கவுமே நமக்கு சரியாகத் தெரியாத போது, நாடுகளுக்கு இடையேயான உளவு மற்றும் உளவாளி(SPY) பற்றி எப்படி விவரிப்பது, விமர்சிப்பது?. ஆனாலும் இந்தப்படத்தில் எனக்கு புரிந்ததை சொல்கிறேன். Raazi ஒரு இந்திய உளவு பற்றிய திரைப்படம். இந்திய உளவாளி பற்றிய திரைப்படம். பொதுவாகவே நான் அதிகமாக கேள்விப்பட்டவை அமெரிக்க, ரஷ்ய உளவுப்படங்கள் தான். இந்திய பாகிஸ்தான், பாகிஸ்தான் இந்திய உளவுப்படங்கள், இதற்கு முன்னால் எத்தனை வந்திருக்கிறது என்பது எனக்குத் தெரியவில்லை. அலியா பட்… பிடிக்கும் என்பது தான் இந்தப்படம் பார்க்க முதல் காரணம். இருந்தாலும் கூகுள்காரி, இந்த படத்திற்கு நல்ல விமர்சனம் இருக்கிறது என்று சொன்னது இரண்டாம் காரணம். அலியா பட், ஜெய்தீப், விக்கி கௌசல், அம்ருதா கான்வில்கர், சிஸிர் சர்மா என நடிகர்கள் தேர்வும் நடிப்பும் சிறப்பு. இந்தியா பாகிஸ்தான் எல்லைப்பகுதியாக காட்டுகின்ற மலைப்பகுதிகள் எத்தனை அழகாக இருக்கின்றன. ஒரு நாட்டை பலவீனப்படுத்துவதற்காக உளவு பார்ப்பது, தன் நாட்டை பாதுகாப்பதற்காக உளவு பார்ப்பது எ...