யானையின் மீதான தேடல்
எனக்கேன் திடீரென யானையைப் பிடிக்கிறது என்று யோசிக்கிறேன். அவள் தான் யானையைப் பற்றிய என் யோசனைகளுக்கு முதல் விதையைப் போட்டிருக்கிறாள். ஆமாம், இனி நான் யானையைப் பற்றி நிறைய தெரிந்துகொள்ள வேண்டும். நிச்சயமாக யானை ஆச்சர்யங்கள் கொண்டதாகவே இருக்கும், அவளைப் போல. இந்த பிரபஞ்சத்தில் நடக்கிற எந்த நிகழ்வும், அந்த நிகழ்வு விரும்பியோ விரும்பாமலோ நடப்பதல்ல... எல்லாமே ஒரு தொடர் நிகழ்வு தான். ஒவ்வொரு கண்ணியும் இன்னொரு கண்ணியுடன் இணைக்கப்பட்டிருப்பது தான் இந்த பிரபஞ்சத்தின் சூட்சுமம். விடுமுறையில் ஊருக்கு வந்தான் வெளிநாட்டில் நல்ல வேலை கிடைக்க, குடும்பத்துடன் செட்டில் ஆகிவிட்ட ஒருவன், தந்தையின் மரணத்திற்காக தனது சொந்த ஊருக்கு வந்தான். அப்போது தான் அவனுக்கு அவன் இருக்கும் கம்பெனியின் ஆசிய ஹெட் பதவி கிடைத்திருந்தது. அது கிடைத்த ஒரு மாதத்தில் தான் அப்பாவின் மரணம். உண்மையில் அவன் அப்பாவின் மரணத்திற்காக மட்டும் வரவில்லை. அவனது கம்பெனி வேலையாக இந்தியாவிற்கு ஒரு வாரம் விசிட் செய்ய இருந்தான். தந்தையின் மரணம் நிகழ, அதற்குமாகச் சேர்த்து கம்பெனி செலவிலே வந்து விட்டான். ஊரில் அவனது குடும்பம் பெரி...