தலித் அரசியல்: தன்னம்பிக்கையும் தடுமாற்றமும்
தலித் அரசியல்: தன்னம்பிக்கையும் தடுமாற்றமும் "ஒரு லட்சியத்தை மேற்கொள்ளுங்கள். அதை அடைவதற்காக விடாமுயற்சியுடன் உழைத்து முன்னேறுங்கள்!". - அம்பேத்கர் இந்திய யூனியன் முழுவதும் தலித்துகள் பெருமளவில் விழிப்படைந்து கொள்ளும் ஒரு நிலை சற்று சமீப காலத்திற்கு முன் தொடங்கியது. இப்போதும் அது வளர்ந்து கொண்டு தான் இருக்கிறது. ஆனால் அப்படி ஒரு சூழல் உருவாகும் போது அதை அடுத்த கட்டத்திற்கு எப்படி எடுத்துச் செல்வது என்பது பற்றி ஆராயாமல் வெறுமனே உணர்வு வயப்பட்ட நிலையில் மட்டுமே தலித் அரசியல் செய்பவர்கள் மற்றும் தலித் அரசியல் பேசுபவர்கள் இருக்கிறார்கள் என்று தான் நான் கூறுவேன். தலித் அரசியல் செய்பவர்கள் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லையே தவிர அதை மிக துல்லியமாக கண்டுபிடித்துவிட்ட தலித் அரசியலின் எதிர் அரசியல்காரர்கள் அதை நீர்த்துப் போகச் செய்வதற்கு பன்முனை தாக்குதல் நடத்துகிறார்கள். கிட்டத்தட்ட அந்த விழிப்பு நிலையை திசை மாற்றுவதில் அவர்கள் வெற்றிக்கு மிக அருகில் இருக்கிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். தலித்துகளுக்கு, தங்களுடைய விழிப்பு நிலையை பற்றி தெளிவான புரிதல் இல்லாமை ஒர...