ஹாலிவுட்டில் ஒரு பா.இரஞ்சித்!! - முருகன் மந்திரம்
ஹாலிவுட்டில் ஒரு பா.இரஞ்சித்!! http://cinemaparvai.com/ black-panther-pa-ranjith/ காலா டீஸர் வெளியான நிமிடத்தில் இருந்து, அதற்கான விமர்சனங்களும் வைரல் ஆகிக்கொண்டிருக்கிறது. ஒரு டீஸரில் இத்தனை குறியீடுகள் கண்டுபிடிக்கப்பட்டு பட்டியல் போடுவது எல்லாம் பா.இரஞ்சித் படங்களுக்கு மட்டும் தான் நிகழும்.காலா டீஸர் வெளியான சில நாட்களுக்குள்ளேயே தயாரிப்பாளராக பா.இரஞ்சித்தின் முதல் திரைப்படம், பரியேறும் பெருமா ளின் முதல் பாடல் வெளியாகி… அதுவும் கருப்பின் கொண்டாட்டமாகவே அமைந்திருக்கிறது. பாடலின் துவக்கமே “கருப்பி என் கருப்பி” என்று தான் தொடங்குகிறது. திரைப்படங்கள் கலையின் ஒரு வடிவமாக இருந்த போதிலும் பெரும்பாலும் அவை எடுப்பார் கைப்பிள்ளை தான். திரைப்படத்துறையில் கொஞ்சமாக அறிவும் வெற்றி பெறுவதற்கான தந்திரமும் வாய்ப்பும் உள்ளவர்கள் என்ன நினைக்கிறார்களோ, அவை தான் திரைப்படங்களாக உருவாக்கப்படுகின்றன. உலக அளவில் இது பொதுவான விதிதான். இந்த விதிக்கு உட்பட்டுத்தான் திரைப்படத்துறை இயங்குகிறது என்றாலும் அவ்வப்போது சில மாற்று முயற்சிகள் நடக்கும். மாற்று பார்வைகள் கொண்ட திரைப்படங்கள் வெளிவரும். அப்படிப்பட்ட மா...