அருவி, உச்சம் தொடும் அன்பின் கொடி!
அருவி, உச்சம் தொடும் அன்பின் கொடி! அருவி, கண்களுக்குள் உன்னை மீண்டும் மீண்டும் கொட்டி நிறைத்துக்கொள்கிறேன் அருவி. அப்பாவின் வாசம் தொடரும் சிறுமகளாய் நீ மழலை பேசுகையில்… மனதில் பாதி அப்பாவாகவும் மீதி மகளாகவும ஆனேன். # அதிதிபாலன் , உனக்கு அப்பா, அம்மா வைத்த பெயர். # அருவி அருண் பிரபு புருஷோத்தமன் வைத்த பெயர். ‘அதிதி’, ‘அருவி’யாய் மாறிய அற்புதம், திரையெங்கும் உணர்வின் வண்ணங்களாய் நிறைந்து வழிகிறது. உதடுகள் திறக்காமல் புன்னகைக்க வைக்கிறாய், ஊமையாகி உள்ளுக்குள்ளே புலம்ப வைக்கிறாய். வாய்விட்டு சிரிக்க நடுவில் நகைச்சுவை தருகிறாய்… சின்னச் சின்னக் குறும்புகளால் ரசிக்க வைக்கிறாய். சினம் கொண்டு சீறுகையில் சிந்தனைக்குள் தள்ளுகிறாய். திரையில் நீயும் எதிரில் நானும் இடைவெளிகள் இருந்தாலும் என் அருகில் வந்து கதைக்கிறாய். ஒன்றரை மணி நேரம் உயிருக்குள் என்னென்னவோ விதைக்கிறாய். இதயம் வலிக்க இமைகள் பனிக்க கண்ணீர் உப்புநீராய் விழுகிறாய். இவை எல்லாம் தாண்டி…. உச்சம் தொடும் அன்பின் கொடியென உயர்ந்து பறக்கிறாய்! இன்று மட்டுமல்ல, என்றென்றும் தமிழ் சினிமாவின் தனிக்கொடியாய் உயர்ந்து ...